தேசிய அளவிலான யோகாசன போட்டியில், ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பெற்று பொள்ளாச்சி மாணவர்கள் அசத்தல்!

கோவை: கோவாவில் நடைபெற்ற தேசிய அளவிலான யோகாசன போட்டியில், ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பெற்று பொள்ளாச்சி மாணவர்கள் அசத்தல் சாதனை படைத்தனர்.


கோவை: கோவாவில் நடைபெற்ற தேசிய அளவிலான யோகாசன போட்டியில், ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பெற்று பொள்ளாச்சி மாணவர்கள் அசத்தல் சாதனை படைத்தனர்.

மூன்றாவது தேசிய அளவிலான யோகாசன போட்டிகள், கடந்த 17ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை கோவாவில் நடை பெற்றது. தேசிய இளைஞர் விளையாட்டு மற்றும் கல்வி குழு மூலமாக நடைபெற்ற இந்த போட்டிகளில், தமிழ்நாடு, கேரளா, மணிப்பூர், மத்திய பிரதேஷ், கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களைச் சேர்ந்த மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.



6 முதல் 10 வயது, 11 முதல் 15 வயது, 15 முதல் 18 வயது, 18 முதல் 20 வயது, உள்ளிட்ட பிரிவுகளில் நடைபெற்ற யோகாசன போட்டிகளில், தமிழகத்தின் சார்பாகப் பொள்ளாச்சியிலிருந்து சென்ற 8 மாணவ மாணவிகள், முதல் பரிசைப் பெற்றனர்.

மேலும் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தையும் பெற்றனர். இதையடுத்து, பொள்ளாச்சிக்குத் திரும்பிய மாணவ, மாணவிகளுக்குப் பொள்ளாச்சி பொதுமக்கள் பாராட்டுக்கள் தெரிவித்தனர்.

மேலும், பொள்ளாச்சி சார்-ஆட்சியர் தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ் வெற்றி பெற்ற மாணவர்களை அழைத்துப் பாராட்டு தெரிவித்தார்.கொரோனா ஊரடங்கால் பள்ளிகள் இன்றி மன உளைச்சலிலிருந்த நிலையில், தேசிய அளவிலான யோகாசன போட்டியில் கலந்துகொண்டு, ஒட்டு மொத்த சாம்பியன்ஷிப் பட்டம் பெற்றது, மகிழ்ச்சி அளிப்பதாக மாணவர்கள் தெரிவித்தனர்.

Newsletter