கோவையில் ஹீலோ இந்தியா சார்பில் மாவட்ட அளவிலான குத்துச் சண்டை போட்டி

ஹீலோ இந்தியா சார்பில் கோவை உப்பிலிபாளையம் பகுதியில் அமைந்துள்ள பர்க்ஸ் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட அளவிலான குத்துச் சண்டை போட்டி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியினை மாவட்ட விளையாட்டு அதிகாரி ஸ்டான்லி மேத்யூ மற்றும் பர்க்ஸ் பள்ளி தலைவர் கல்பனா ஆகியோர் பங்கேற்று துவக்கி வைத்தனர். இதில், மொத்தமாக 49 குத்துச் சண்டை வீரர்கள் பங்கேற்றனர். 

14, 17 வயதுக்குட்பட்ட ஆண், பெண் இருபாலருக்கும் தனித் தனியே நடைபெற்ற இப்போட்டியில், 14 வயதுக்குட்பட்ட ஆண், பெண் இருவருக்கும் 46, 48, 50, 52, 54 ஆகிய எடை பிரிவிலும், 17 வயதுடைய ஆண்களுக்கு 49, 52, 56, 60, 64 ஆகிய எடைபிரிவிலும், 17 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு 48, 51, 54, 57, 60 உள்ளிட்ட எடை பிரிவிலும் போட்டிகள் நடைபெற்றது.

இப்போட்டியில் முதலிடத்தை பெற்ற அனைவருக்கும் சான்றிதழ் மற்றும் முதல் பரிசுத் தொகையாக ரூ.350, இரண்டாம் பரிசுத் தொகையாக ரூ.250, மூன்றாம் பரிசுத் தொகையாக ரூ.150-ம் வரைவோலையாக வழங்கப்பட்டது.

மேலும், இப்போட்டியின் முடிவில் சிறந்த குத்துச் சண்டை வீரர்கள் இருவர் தேர்ந்தெடுக்கப்பட்டு மதுரையில் நடைபெறும் மாநில அளவிலான போட்டியில் அரசு நிதியில் பங்கேற்பர். மற்ற வீரர்கள் தங்களது சொந்த செலவிலேயே அப்போட்டிகளில் பங்கேற்க வேண்டும். மாநில அளவில் வெற்றி பெற்றவர்கள் கவுகாத்தியில் நடைபெறும் இறுதி குத்தச் சண்டை போட்டியில் பங்கேற்பர்.

இதுகுறித்து மேலும் தகவலுக்கு குத்துச் சண்டை பயிற்சியாளர் எம்.விஸ்வநாதன் அவர்களுக்கு 9486835811 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம்.

Newsletter