தேசிய அளவிலான டிராக் சைக்கிளிங் போட்டியில் கோவை மாணவி வெற்றி

கோவை: தேசிய அளவிலான டிராக் சைக்கிளிங் போட்டியில் கலந்துகொண்டு பதக்கங்களை வென்று வந்த வீராங்கனைக்கு, கோவை ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.


கோவை: தேசிய அளவிலான டிராக் சைக்கிளிங் போட்டியில் கலந்துகொண்டு பதக்கங்களை வென்று வந்த வீராங்கனைக்கு, கோவை ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஐதராபாத் உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் 72வது தேசிய அளவிலான டிராக் சைக்கிளிங் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் 14 வயதுக்கு உட்பட்ட பிரிவில் தமிழகத்திலேயே, கோவையைச் சேர்ந்த தன்யதா மற்றும் பூஜா ஸ்வேதா ஆகியோர் தேசிய அளவிலான பதக்கங்களை வென்றுள்ளனர்.

இந்தநிலையில் பயிற்சியாளர் கிருஷ்ணமூர்த்தி பூஜா, ஸ்வேதாவிற்கு பாராட்டுக்களைத் தெரிவித்தார்.



தொடர்ந்து, கோவை ரயில் நிலையம் வந்தடைந்த வெற்றி வீராங்கனை பூஜா ஸ்வேதாவிற்க்கு கோவை மாவட்ட சைக்கிளிங் அசோசியேசன் சார்பாக விக்னேஷ் உட்பட குழுவினர் அனைவரும் இணைந்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

கோவையைச் சேர்ந்த மாணவி தேசிய அளவிலான போட்டியில் முக்கியத்துவம் பெற்றுள்ள நிகழ்வு, கோவை மக்கள் மத்தியில் பாராட்டுகளைப் பெற்றுள்ளது.

Newsletter