குன்னூரில் மாநில அளவிலான கட்டுரை போட்டி: குன்னூர் புனித மரியன்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி 7வது இடம் பிடித்து சாதனை!

நீலகிரி: குன்னூரில் விழிப்பான இந்தியா, செழிப்பான இந்தியா தலைப்பில் மாநில அளவில் ஆன்லைனில் நடைபெற்ற கட்டுரை போட்டியில் குன்னூர் புனித மரியன்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி செல்வி கோபிகா 7வது இடம் பிடித்தார்.

ஊழல் தடுப்பு கண்காணிப்புத்துறை சென்னை சார்பில் விழிப்பான இந்தியா செழிப்பான இந்தியா தலைப்பில் மாநில அளவில் ஆன்லைனில் கட்டுரைப் போட்டிகள் நடைபெற்றன.

இதில் மாநிலத்தில் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவ மாணவியர் பங்கேற்றனர். இதி்ல் குன்னூர் புனித மரியன்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவி செல்வி கோபிகா 7ம் இடம் பிடித்து வெற்றி பெற்றார்.

இதையடுத்து, அவருக்கு ஊழல் தடுப்பு கண்காணிப்புத்துறை சென்னை சார்பாக சான்றிதழும் கேடயமும் வழங்கப்பட்டது. விழாவில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவு காவல் ஆய்வாளர் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Newsletter