மாநில அளவிலான முவய்தாய் போட்டி: கோவை மாணவர்களுக்கு 4 தங்கப்பதக்கம்!

கோவை: மாநில அளவிலான முவய்தாய் போட்டியில் கோவை மாணவர்கள் 4 தங்கப்பதக்கமும், 5 வெள்ளி பதக்கங்களையும் வென்று சாதனை புரிந்தனர்.


கோவை:மாநில அளவிலான முவய்தாய் போட்டியில் கோவை மாணவர்கள் 4 தங்கப்பதக்கமும், 5 வெள்ளி பதக்கங்களையும் வென்று சாதனை புரிந்தனர்.

சென்னையில் மாநில அளவிலான முவய்தாய் போட்டி நடத்தப்பட்டது. அதில் தஞ்சை, கடலூர், சேலம், சென்னை, கோவை, திருவண்ணாமலை உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 100-க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டனர்.

கோவையிலிருந்து மாஸ்டர் பெரோஸ் தலைமையில் 9 மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் இரண்டு வீரர்கள் புரோ பைட்டிலும், 7 வீரர்கள் அமெச்சூர் போட்டியிலும் கலந்து கொண்டனர். இதில் 4 தங்கப் பதக்கமும், 5 வெள்ளிப் பதக்கமும் வென்று மாணவர்கள் சாதனை புரிந்தனர். இதையடுத்து பள்ளி மாணவ மாணவிகள் பாராட்டு தெரிவித்தனர்.

Newsletter