கோவையில், நலிவடைந்த பள்ளிகளின் மேம்பாட்டுக்காக ஒருநாள் கிரிக்கெட் போட்டி!

கோவை: நலிவடைந்த பள்ளிகளில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும்விதமாக நிறுவனங்களுக்கிடையேயான ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டது.


கோவை: நலிவடைந்த பள்ளிகளில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும்விதமாக நிறுவனங்களுக்கிடையேயான ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டது.

நலிவடைந்த பள்ளிகளின் மேம்பாட்டுக்காகஅதாவது, அரசு பள்ளி அடிப்படை கட்டமைப்பு வசதியை மேம்படுத்துவதற்காக நிதி திரட்டும் நோக்கில் கோவை குமரகுரு கல்லுாரி மைதானத்தில் நிறுவனங்களுக்கு இடையேயான ஒருநாள் கிரிக்கெட் போட்டியை கோயம்புத்துார் யுனைட்டெட் ரவுண்ட் டேபிள் நடத்தியது.

நிறுவனங்கள் மற்றும் அதில் பணியாற்றும் பணியாளர்களிடையே ஒருவருக்கு ஒருவர் அறிமுகமாகும் மகிழ்வான நிகழ்வாகவும் இந்த யுனைட்டெட் கோப்பைக்கான போட்டி நடந்தது. 10-வது ஆண்டாக நடக்கும் இந்தப் போட்டியில் 16 அணிகள் பங்கேற்றன.

நாள் முழுவதும் மகிழ்ச்சியாகவும், நகைச்சுவையாகவும், இசையோடும் சிறப்பாக நடைபெற்றது. அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகள் ஒளி வெள்ளத்தில் நடந்தது. இந்த ஆண்டு என்.எம்.எஸ்.குளோபல் மற்றும் ஸ்டெப்ஸ் சோர்சிங் இறுதிப் போட்டியில் விளையாடின.

ஸ்டெப்ஸ் சோர்சிங் யுனைட்டெட் கோப்பையை வென்றது. இந்தப் போட்டியில் கிடைத்த முழுத்தொகையும் நலிவடைந்த அரசு பள்ளியின் கட்டடங்கள் கட்டுமானப் பணிக்கு பயன்படுத்தப்பட்டன. கிரிக்கெட் போட்டியை தரணி பம்ப்ஸ் நிர்வாக இயக்குனர் தரணி ரங்கநாதன் துவக்கி வைத்தார். ரவுண்ட் டேபிள் தலைவர் பாலச்சந்திரன் முன்னிலை வகித்தார். செயலாளர் வருண் பரேக், ஒருங்கிணைப்பாளர் ஜெய்ராம் திம்மையன், விக்னேஷ் மற்றும் அஸ்வத் ஆகியோர் பங்கேற்றனர்.

கோயம்புத்துார் யுனைட்டெட் ரவுண்ட் டேபிள் 186... இது இந்திய ரவுண்ட் டேபிளின் ஒரு அங்கமாகத் திகழ்கிறது. கடந்த 15 ஆண்டுகளாக ஏழை, எளிய குழந்தைகள் வறுமையால் வாடுவோருக்கு பல்வேறு திட்டங்களின் மூலம் உதவி வருகிறது. கல்வி வழியாக சுதந்திரம் என்ற தாரக மந்திரத்தை பின்பற்றி பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி வருகிறது.

கோவையில் 35-க்கும் மேற்பட்ட வகுப்பறைகளை கட்டிக் கொடுத்துள்ளது. இதன்மூலம் 1,500 மாணவர்கள் பயனடைந்துள்ளனர். இதனுடன் கூடுதலாக, கடந்த சில ஆண்டுகளாக 800-க்கும் மேற்பட்ட செயற்கை கை, கால்கள் இலவசமாக வழங்கியுள்ளது. பல்வேறு மருத்துவமனைகளுக்கு கோவிட் பாதுகாப்பு உபகரணங்களை வழங்கியது குறிப்பிடத்தக்கது.

Newsletter