வலு தூக்கும் போட்டியில் தங்கம் வென்ற கோவை இளைஞர்களுக்கு ஊக்கத்தொகை -நினைவுப்பரிசு!

கோவை: கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் பொது இடங்களில் வைக்கப்பட்டிருந்த 90 குப்பைத் தொட்டிகள் அகற்றப்பட்டுள்ளன.


கோவை: சர்வதேச அளவிலான வலுதூக்கும் போட்டியில் கலந்துகொண்டு 6 பதக்கங்களை வென்று வந்த கோவையைச் சேர்ந்த இளைஞர்களுக்கு மனிதநேய மக்கள் கட்சி சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. அப்போது அவர்களுக்கு ஊக்கத்தொகை மற்றும் நினைவுப்பரிசு வழங்கப்பட்டது.

உலக வலுதூக்கும் கூட்டமைப்பு சார்பில் கடந்த 4-ம் தேதி நாக்பூரில் உலக அளவிலான வலுதூக்கும் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் பல்வேறு நாடுகளில் இருந்து வீரர்கள் கலந்து கொண்டனர். இப்போட்டிகளில் கலந்து கொள்ள கோவையைச் சேர்ந்த சாஜித் ஹூசைன் மற்றும் ரிச்சர்ட் சன் என்ற இரண்டு இளைஞர்களுக்கு வாய்ப்பு கிடைத்தது.

ரிச்சர்ட் சன் ஜூனியர் 100 கிலோ எடைப் பிரிவில் கலந்து கொண்டு 3 தங்கப் பதக்கங்களை வென்றார். இதில் டெட் லிப்ட் போட்டியில் 290 கிலோ எடையைத் தூக்கி உலக அளவிலான முந்தைய சாதனையை முறியடித்துள்ளார். இதேபோல், சாஜித் ஹூசைன் என்ற இளைஞர் பெஞ்ச் பிரஸ் போட்டியில் கலந்து கொண்டு ஒரு தங்கம் மற்றும் இரண்டு வெள்ளிப் பதக்கங்களை வென்றார்.

சாதனை படத்த அந்த இரண்டு இளைஞர்களையும் பெருமைப்படுத்தும்விதமாக மனிதநேய மக்கள் கட்சியின் இளைஞரணி சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது.



விழாவில் அவர்கள் இருவருக்கும் பொன்னாடை போர்த்தி நினைவுப் பரிசுகள் மற்றும் ஊக்கத்தொகை வழங்கி கௌரவிக்கப்பட்டது.

விழாவுக்கு, மனிதநேய மக்கள் கட்சியின் இளைஞரணி மாவட்டச் செயலாளர் மைதீன் தலைமை தாங்கினார். இளைஞரணி மாவட்ட துணைச் செயலாளர் பாபு, த.மு.மு.க மாநிலச் செயலாளர் சாதிக் அலி, மாநில தொண்டரணி செயலாளர் சர்புதீன், மருத்துவ சேவை அணி மாநிலத் துணைச் செயலாளர் ரபீக், மாநில தலைமை செயற்குழு உறுப்பினர்கள் சாகுல் ஹமீது, ஜாஃபர் சாதிக், மாவட்ட தலைவர் அகமது கபீர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ம.ம.க மாவட்ட செயலாளர் ஜெம் பாபு, மாவட்ட துணைத் தலைவர் சிராஜூதீன், ம.ம.க மாவட்ட பொருளாளர் அப்பாஸ், ம.ம.க மாவட்ட துணைச் செயலாளர் பஷீர், த.மு.மு.க மாவட்ட துணைச் செயலாளர் ஆசிக் அஹமது, மருத்துவ அணி மாவட்டச்செயலாளர் ஆஷிக், மத்திய பகுதி தலைவர் இப்ராகிம், மத்திய பகுதி செயலாளர் ரியாஸ், மத்திய பகுதி ம.ம.க செயலாளர் அபு, மாவட்ட செயற்குழு உறுப்பினர் பயாஸ், மருத்துவ அணி பொருளாளர் பைசல், தெற்கு பகுதி இப்ராஹிம் ஆகியோரும் பங்கேற்றனர்.

Newsletter