நீண்ட இடைவெளிக்கு பின், கோவை செட்டிப்பாளையத்தில் தேசிய அளவிலான கார் பந்தயம்..! பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை..!

கோவை: கோவை செட்டிப்பாளையத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு, கொரோனா பாதுகாப்பு விதிகளை பின்பற்றி தேசிய அளவிலான கார் பந்தயம் நடைபெற்று வருகிறது.


கோவை: கோவை செட்டிப்பாளையத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு, கொரோனா பாதுகாப்பு விதிகளை பின்பற்றி தேசிய அளவிலான கார் பந்தயம் நடைபெற்று வருகிறது.



கோவை செட்டிபாளையம் கரி மோட்டார் பந்தய மைதானத்தில் தேசிய அளவிலான பந்தயம், 15 பிரிவுகளில் இன்று முதல் நடைபெற்று வருகிறது.



இதில், இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்து 8 அணிகளை சேர்ந்த 40 கார் பந்தய வீரர்கள் பங்கேற்றுள்ளனர். ஐந்து சுற்று வாரியாக நடைபெறும் இப்பந்தத்தில், ஒவ்வொரு சுற்றிலும் வெற்றி பெறக்கூடிய வீரர்களுக்கு வரும் ஜனவரி மாதம், ஜே கே டயர் (JK tyre FMSCI) தேசிய கார் பந்தய சேம்பியன்ஷிப்கான இறுதி சுற்று நடைபெற உள்ளது.



அப்போட்டியில், வெற்றி பெறக்கூடிய வீரர் அடுத்து ஆசிய அளவிலான கார் பந்தய போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்பர், எனவும், கொரோனா காரணமாக நீண்ட இடைவெளிக்கு பிறகு கோவையில் இன்று இப்பந்தயம் நடைபெற்று வருகிறது, என போட்டி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

மேலும், பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றி பார்வையாளர்கள் அனுமதிக்கப்படாமல் இப்போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter