64-வது தேசிய பள்ளிகள் கூட்டமைப்பு விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வென்ற பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் கல்லூரி மாணவிகளுக்கு ஊக்கத் தொகை!

கோவை: 64-வது தேசிய அளவிலான பள்ளிகள் கூட்டமைப்பு விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்களை பெற்ற கோவை பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் பெண்கள் கல்லூரி மாணவிகளுக்கு ஊக்கத் தொகை வழங்கப்பட்டது.



கோவை: 64-வது தேசிய அளவிலான பள்ளிகள் கூட்டமைப்பு விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்களைப் பெற்ற கோவை பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் பெண்கள் கல்லூரி மாணவிகளுக்கு ஊக்கத் தொகை வழங்கப்பட்டது.



தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், 64-வது தேசிய பள்ளிகள் கூட்டமைப்பு விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. தங்கப்பதக்கம் பெற்றவர்களுக்கு ரூ.2 லட்சம், வெள்ளிப்பதக்கம் பெற்றவர்களுக்கு ரூ.1.50 லட்சம், வெண்கலப்பதக்கம் பெற்றவர்களுக்கு ரூ.1 லட்சம் என அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் மாணவ, மாணவிகளுக்கான ஊக்கத் தொகைக்கான காசோலை வழங்கப்பட்டது.



இதில், மாணவிகள் பிரிவில் கோவை பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் கல்லூரியைச் சேர்ந்த விஷ்ருதா (தடகளத்தில் தங்கம்), சிவரஞ்சனி (பூப்பந்து போட்டியில் வெள்ளி), ஒலிம்பா ஸ்டெஃபி (தடகளத்தில் வெண்கலம்) ஆகிய வீராங்கனைகளை கவுரப்படுத்தும் வகையில் காசோலைகளை வழங்கப்பட்டது.



Newsletter