உலக மாற்றுத்திறனாளிகள் தினம்: அவிநாசி உள் விளையாட்டு அரங்கில் விளையாட்டு போட்டிகள்; ஆறு மாவட்டங்களை சேர்ந்த மாற்றுத்திறனாளி வீரர்கள் பங்கேற்பு..!

திருப்பூர்: உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் உள்ள உள் விளையாட்டு அரங்கில் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டி (பாராலிம்பிக் ஸ்போர்ட்ஸ்) போட்டிகள் இன்று நடைபெற்றது.


திருப்பூர்: உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் உள்ள உள் விளையாட்டு அரங்கில் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டி (பாராலிம்பிக் ஸ்போர்ட்ஸ்) போட்டிகள் இன்று நடைபெற்றது.



உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, அவிநாசி, போனிக்ஸ் பாராலிம்பிக் ஸ்போர்ட்ஸ் டிரஸ்ட் மற்றும் திருப்பூர் ஸ்மார்ட் சிட்டி ரோட்டரி சங்கம் இணைந்து, மாற்றுத் திறனாளிகளுக்கான அமர்வு கைப்பந்து மற்றும் பேட்மின்டன் விளையாட்டு போட்டிகளை நடத்தினர்.

நிகழ்ச்சியை, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் தலைமை வகித்து துவக்கி வைத்தார். போனிக்ஸ் பாராலிம்பிக் ஸ்போர்ட்ஸ் டிரஸ்ட் தலைவர் ராஜேஷ், திருப்பூர் ஸ்மார்ட் சிட்டி ரோட்டரி சங்க நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.



இதில், திருப்பூர், கோவை, தர்மபுரி, ஈரோடு, கரூர் உள்ளிட்ட ஆறு மாவட்டங்களை சேர்ந்த மாற்றுத்திறனாளி வீரர்கள் பங்கேற்று விளையாடினர்.



பாரா வாலிபால் விளையாட்டில், கோவை க்ரவுன் அணி முதலிடம் பெற்றது. தர்மபுரி அணியினர் இரண்டாமிடமும், திருப்பூர் அணியினர் மூன்றாமிடமும் பெற்றனர்.



பாரா பாட்மின்டன் விளையாட்டில், கைகளால் விளையாடும் பிரிவில் கணேசன் முதலிடமும், பொன்னுசாமி இரண்டாமிடமும், அண்ணாசாமி மூன்றாமிடமும் பெற்றனர். கால்களின் உதவியுடன் விளையாடும் பிரிவில், தங்கம் முதலிடமும், சம்பத்குமார் இரண்டாமிடமும், ராஜேஷ் குமார் மூன்றாமிடமும் பெற்றனர்.

திருப்பூர் ஸ்மார்ட் சிட்டி ரோட்டரி நிர்வாகிகள் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினர்.

Newsletter