பாரதியார் பல்கலைக்கழகத்தின் சார்பில் 35வது கல்லூரிகளுக்கு இடையேயான தடகள போட்டிகள்

பாரதியார் பல்கலைக்கழகத்தின் உடற்கல்வித்துறை சார்பில் 35வது கல்லூரிகளுக்கு இடையேயான தடகள போட்டிகள் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு நடைபெற்றது. இதில் பி.எஸ்.ஜி.ஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி மாணவி புஷ்பாஞ்சலி 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் 14.2 நொடிகளில் கடந்து சிறந்த விளையாட்டு வீரர் விருதை வென்றார். பி.எஸ்.ஜி கலை கல்லூரி மாணவன் ஜோஸுவா செல்லதுரை 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் 10.5 நொடிகளில் கடந்து சிறந்த விளையாட்டு வீரர் விருதை வென்றார். 

பி.எஸ்.ஜி கலை கல்லூரி ஆண்கள் பிரிவில் 83 புள்ளிகளுடன், கொங்கு கலை கல்லூரியில் பெண்கள் பிரிவில் 57 புள்ளிகளுடன் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்றது. என்.ஜி.பி கல்லூரி ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் இரண்டாம் இடத்தில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்றது.

Newsletter