தமிழக மாற்றுத் திறனாளி கிரிக்கெட் அணிக்காக தேர்வாகியுள்ள நபருக்கு திருப்பூர் மாவட்ட ஆட்சியர் பாராட்டு!

திருப்பூர்: தமிழக மாற்றுத் திறனாளி கிரிக்கெட் அணிக்காக திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தை சேர்ந்த லட்சுமணன் என்றவர் தேர்வான நிலையில் மாவட்ட ஆட்சியரை சந்தித்து பாராட்டு பெற்றுள்ளார்.


திருப்பூர்: தமிழக மாற்றுத் திறனாளி கிரிக்கெட் அணிக்காக திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தை சேர்ந்த லட்சுமணன் என்றவர் தேர்வான நிலையில் மாவட்ட ஆட்சியரை சந்தித்து பாராட்டு பெற்றுள்ளார்.

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பகுதியை சேர்ந்தவர் மாற்றுத்திறனாளி லட்சுமணன்(46). 5 வயதிலிருந்தே இளம்பிள்ளை வாதம் நோயால் இடது கை மற்றும் கால் பாதிப்படைந்த நிலையில் லட்சுமணனுக்கு சிறுவயது முதலே கிரிக்கெட் மீது இருந்த தீராத ஆசை இருந்து வந்துள்ளது.

இதனிடையே, தன்னால் கிரிக்கெட் போட்டிகளில் கலந்து கொள்ள முடியாது என்ற காரணத்தால் தன் மகனுக்கு கிரிக்கெட் பயிற்சி கொடுக்க முடிவு செய்து பயிற்சி முகாம்களுக்கு அழைத்துச் சென்றுள்ளார். மேலும், காங்கேயம் பகுதியில் தனியாக கிரிக்கெட் மைதானம் அமைத்து விளையாட ஆர்வமுள்ளவர்களுக்கு பயிற்சி கொடுத்து வந்துள்ளார்.

இந்நிலையில், இதனை கண்ட நபர் ஒருவர் மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் அணிக்கு முயற்சிக்க வலியுறுத்தியதை அடுத்து தமிழக மாற்றுத் திறனாளி கிரிக்கெட் அணி தேர்வில் கலந்து கொண்டுள்ளார்.



இதில் சிறப்பாக விளையாடியதையடுத்து, தற்போது தமிழக மாற்றுத் திறனாளி கிரிக்கெட் அணிக்கு காங்கேயத்தில் இருந்து லட்சுமணன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

மேலும், வருகின்ற நவம்பர் மாதம் துபாயில் நடைபெறக்கூடிய தமிழகம், மும்பை, டெல்லி, கொல்கத்தா, ராஜஸ்தான் அணிகள் விளையாட உள்ள கிரிக்கெட் போட்டிக்கும் தமிழக அணி சார்பில் தேர்வாகியுள்ளார்.

இதனையடுத்து, இன்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் அவர்களை சந்தித்து பாராட்டு பெற்றார். மாவட்ட ஆட்சியர் மாவட்ட நிர்வாகத்தால் முடிந்த உதவிகளை செய்வதாக உறுதி அளித்துள்ளதாக நம்பிக்கை தெரிவித்தார்.

Newsletter