துபாயில் நடைபெறவுள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான DPL கிரிக்கெட் போட்டிக்கு பொள்ளாச்சி பட்டதாரி இளைஞர் தேர்வு - அரசு உதவ கோரிக்கை!

கோவை: துபாயில் நடைபெறவுள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான DPL கிரிக்கெட் போட்டிக்கு தேர்வாகியுள்ள பொள்ளாச்சியை சேர்ந்த சீனிவாசன் சென்னை அணிக்காக நிலையில், அரசு உதவ வேண்டுமென மாற்றுத்திறனாளி பட்டதாரி இளைஞர் கோரிக்கை விடுத்துள்ளார்.


கோவை: துபாயில் நடைபெறவுள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான DPL கிரிக்கெட் போட்டியில் பொள்ளாச்சியை சேர்ந்த சீனிவாசன் சென்னை அணிக்காக தேர்வாகியுள்ள நிலையில், அரசு உதவ வேண்டுமென மாற்றுத்திறனாளி பட்டதாரி இளைஞர் கோரிக்கை விடுத்துள்ளார்.

பொள்ளாச்சி அருகே உள்ள மாமரத்துப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மாற்றுத்திறனாளி சீனிவாசன். B.E சிவில் இன்ஜினியரிங் பட்டதாரியான இவரின் தந்தை மற்றும் தாயார் சிறுவயதிலேயே இறந்து விட்டனர். சீனிவாசன் தற்போது பாட்டி ரங்கம்மாள் அரவணைப்பில் உள்ளார். இவரது இடது கை பாதிப்படைந்த அடைந்த நிலையில் இருந்தாலும், பள்ளிப்பருவத்தில் இருந்தே கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டுள்ளார்.

மாவட்டம் மற்றும் மாநில அளவில் மாற்றுத்திறனாளிகளுக்காக நடைபெறும் போட்டிகளில் கலந்து கொண்டு விளையாடியுள்ளார்.



கடந்த 2019ம் ஆண்டு இந்திய B அணிக்காக இவர் வேகபந்து வீச்சாளராக விளையாடியுள்ளார்.



இந்நிலையில், துபாயில் அடுத்த மாதம் நடைபெற உள்ள டி.பி.எல். கிரிகெட் பிரிமியர் லீக் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த சென்னை சூப்பர் ஸ்டார் அணியில், வேகப்பந்து வீச்சாளராக விளையாட இடம்பெற்றுள்ளார். ஆனால், மாற்றுத்திறனாளியான இவருக்கு வேலை இல்லாததால், வருமானம் இன்றி சிரமப்பட்டு வருகிறார். துபாய்க்கு செல்வதற்கு பயண செலவுக்கு பணம் இல்லை. மேலும் விளையாட்டு உபகரணங்கள் வாங்க முடியாத நிலையில் உள்ளதால், மனவேதனை அடைந்துள்ளார்.

எனவே, தமிழக அணிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ள தான், முழு திறமையும் காட்டி தமிழகத்திற்கு பெருமை சேர்ப்பேன் என்றும், வறுமையில் வாடும் தனக்கு அரசு உதவ வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ள சீனிவாசன், பொள்ளாச்சி சார் ஆட்சியர் வைத்தியநாதனிடம் கோரிக்கை மனுவை அளித்துள்ளார்.

Newsletter