இந்தியா முழுவதும் சிறந்த விளையாட்டு வீரர்களை கண்டறிய என்ஒய்சிஎஸ் சார்பில் விளையாட்டுப் போட்டிகள்

கடந்த 17 ஆண்டுகலாக ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவின் பங்கு மிகவும் குறைவாக உள்ளது. இந்நிலையினை மாற்ற என்ஒய்சிஎஸ் சார்பில் இந்தியா முழுவதும், மாவட்டங்கள் தோறும் சிறந்த விளையாட்டு வீரர்களை கண்டறிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெறவுள்ளது.

தமிழகத்தில் திருச்சி, சென்னை, மதுரை, கோவை, பாண்டிச்சேரி ஆகிய மையங்களில் முதற்கட்ட தகுதி தேர்வு போட்டிகள் 2017 ஜனவரி மாதம் நடைபெறவுள்ளது.

கோவையில், வரும் ஜனவரி 8ம் தேதியன்று சிஐடி கல்லூரி மைதானத்தில் போட்டிகள் நடைபெறவுள்ளது. இதில், கோவை, உதகை, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து விளையாட்டு வீரர்கள் கலந்துகொள்ள உள்ளனர்.

இதில், 100 மீட்டர், 200 மீட்டர், 400 மீட்டர் ஓட்டப்பந்தயம் நடைபெறவுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இப்போட்டிகள் மாவட்டம், மண்டலம், தேசிய அளவில் என மூன்று கட்டங்களாக நடத்தப்பட உள்ளன. 

தேசிய அளவில் நடைபெறும் போட்டியில் தேர்வு செய்யப்படும் வீரர்களுக்கு 3 ஆண்டுகள் அனைத்து விதமான பயிற்சிகளும் அளிக்கப்படும்.

Newsletter