சிஎஸ்கே அணியை சேர்ந்த இந்திய வீரர் உட்பட 10க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று..! கலக்கத்தில் சென்னை ரசிகர்கள்!

ஐக்கிய அரபு அமீரகம் சென்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் வேகப்பந்து வீச்சாளர் உட்பட 10க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.



ஐக்கிய அரபு அமீரகம் சென்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் வேகப்பந்து வீச்சாளர் உட்பட 10க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஐபிஎல் போட்டியில் விளையாடுவதற்காக 8 அணிகளும் ஐக்கிய அரபு அமீரகம் சென்றுள்ளது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த 21ம் தேதி துபாய் சென்றது.

இதனை தொடர்ந்து, அணி வீரர்கள் மற்றும் ஸ்டாஃப்கள் தனித்தனியாக தனிமைப்படுத்தப்பட்டனர். ஆறு நாட்கள் தனிமைப் படுத்தலுக்குப் பிறகு வீரர்கள் பயிற்சிக்கு செல்ல தயாராக இருந்தனர்.

இந்த நிலையில், சென்னை அணியில் வேகப்பந்து வீச்சாளர் உட்பட 10க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் வீரர்கள் மேலும் ஒருவாரம் தனிமைப்படுத்தப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாரத்தில் மூன்று முறை பரிசோதனை மேற்கொண்டு அதில் நெகட்டிவ் என முடிவு வந்தால் வீரர்கள் அணியுடன் இணைய அனுமதிக்கப்படுவார்கள்.

Newsletter