கோவையில் விளையாட்டு மைதானங்கள் திறக்கப்படாததால் மன அழுத்தத்தை சந்திக்கும் வீரர்கள்..! ஸ்போர்ட்ஸ் கோட்டா குறித்து கவலை!

கோவை: ஐந்தாம் கட்ட ஊரடங்கில் பல தளர்வுகள் அளிக்கப்பட்டாலும், இரண்டு மாதங்களாக உடற்பயிற்சி கூடங்கள் மற்றும் விளையாட்டு மைதானங்கள் திறக்கப்படாமல் இருப்பதால் தற்போது வரை எந்த தேர்வுகளும் நடத்தப்படவில்லை. இதனால் ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் படிக்க முயற்சிக்கும் மாணவர்கள் தவித்து வருகின்றனர்.


கோவை: ஐந்தாம் கட்ட ஊரடங்கில் பல தளர்வுகள் அளிக்கப்பட்டாலும், இரண்டு மாதங்களாக உடற்பயிற்சி கூடங்கள் மற்றும் விளையாட்டு மைதானங்கள் திறக்கப்படாமல் இருப்பதால் தற்போது வரை எந்த தேர்வுகளும் நடத்தப்படவில்லை. இதனால் ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் படிக்க முயற்சிக்கும் மாணவர்கள் தவித்து வருகின்றனர்.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பரவலை தவிர்க்கும் வகையில் நாடு முழுவதும் ஐந்தாம் கட்ட ஊரடங்கு ஜூன் 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் திரையரங்குகள், நீச்சல் குளங்கள், நடனம் மற்றும் உடற்பயிற்சி கூடங்கள், பூங்காக்கள் மற்றும் விளையாட்டு மைதானங்கள் அனைத்து மூடப்பட்டுள்ளன.

இந்நிலையில், மத்திய மாநில அரசுகள் அறிவித்துள்ள ஐந்தாம் கட்ட ஊரடங்கில் பல்வேறு கட்டுபாடுகளை தளர்த்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இருப்பினும் விளையாட்டு மைதானங்கள் மற்றும் உடற்பயிற்சி கூடங்களை திறக்க அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் விளையாட்டு வீரர்கள் மற்றும் விளையாட்டுகளில் ஈடுபட்ட மற்றவர்கள் மற்றும் உடற்பயிற்சியில் ஆர்வம் கொண்டவர்கள் ஏமாற்றமடைந்தனர்.

மேலும், உடற்பயிற்சி கூடங்கள், விளையாட்டு மைதானங்கள், நீச்சல் குளங்கள் உள்ளிட்டவைகளை மீண்டும் திறக்கப்படுவது குறித்து அரசாங்கத்திடமிருந்து தெளிவான அறிவிப்பு எதுவும் வரவில்லை என்பதால், குழப்பமான மனநிலையில் உள்ள விளையாட்டு வீரர்கள் மன அழுத்தத்தில் உள்ளனர்.

அதேபோல, உடற்பயிற்சி கூடங்கள் மற்றும் விளையாட்டு மைதானங்கள் திறக்கப்படாமல் இருப்பதால் தற்போது வரை எந்த தேர்வுகளும் நடத்தப்படவில்லை. இதனால் ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் படிக்க முயற்சிக்கும் மாணவர்கள் தவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளதால், இரண்டு மாதங்களாக மூடப்பட்டுள்ள உடற்பயிற்சி நிலையங்களை திறக்க அனுமதி அளிக்க கோரி ஜிம் உரிமையாளர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter