பாரதியார் பல்கலை கீழ் செயல்படும் கல்லூரிகளுக்கு இடையிலான தடகள போட்டிகள் துவக்கம்

கோவையிலுள்ள பாரதியார் பல்கலைக் கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் கல்லூரிகளுக்கு இடையிலான 35-வது தடகள போட்டிகள் கோவை நேருவிளையாட்டு அரங்கில் இன்று துவங்கியது.

இதில் பல்கலைக்கு உட்பட்ட 58 கல்லூரிகளை சேர்ந்த 1400 வீரர் மற்றும் வீராங்கனைகள் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டுள்ளனர். முதல் நாளான இன்று 100 மீட்டர் ஓட்டப்பந்தயம், குண்டு எறிதல், நீளம் தாண்டுதல், ஈட்டி எறிதல் உள்ளிட்ட ஏராளமான போட்டிகள் நடைபெற்றது.



இப்போட்டிகளில் கலந்து கொண்ட வீரர் மற்றும் வீராங்கனைகள் சிறப்பாக விளையாடி தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். மேலும், வட்டு எறிதல், தடை தாண்டும் ஓட்டம், உயரம் தாண்டுதல் உள்ளிட்ட போட்டிகள் நடைபெறவுள்ளது. இறுதி நாளான 23ம் தேதி வெற்றி பெறும் வீரர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளது.

Newsletter