கோவையில் கராத்தே பயிற்சி முடித்த 250 மாணவர்களுக்கு கராத்தே பிளாக் பெல்ட் வழங்கும் நிகழ்ச்சி!

கோவை: கராத்தே பயிற்சியில் 8 படிநிலைகளை வெற்றிகரமாக முடித்த மாணவர்கள் 250 பேருக்கு பிளாக் பெல்ட் வழங்கும் நிகழ்ச்சி கோவையில் இன்று நடைபெற்றது.

கோவை: கராத்தே பயிற்சியில் 8 படிநிலைகளை வெற்றிகரமாக முடித்த மாணவர்கள் 250 பேருக்கு பிளாக் பெல்ட் வழங்கும் நிகழ்ச்சி கோவையில் இன்று நடைபெற்றது.



கோவை, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட 8 மாவட்டங்கள் மற்றும் கேரளா, ஆந்திரா உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் கராத்தே பயிற்சி மேற்கொண்டு அதில் 8 படி நிலைகளை வெற்றிகரமாக முடித்தவர்ககளுக்கு பிளாக் பெல்ட் வழங்கும் நிகழ்ச்சி கோவை ஆவரம்பாளையம் பகுதியில் உள்ள கோ-இண்டியா ஹாலில் நடைபெற்றது.



ஜித்தோ குகாய் அசோசியேஷன் சார்பில் நடைபெற்ற இந்த விழாவில் ஜித்தோ குகாய் தேசிய தலைவர் கராத்தே தியாகராஜன், ஜித்தோ குகாய் தேசிய பொதுச் செயலாளர் முத்துராஜ் ஆகியோர் கலந்து கொண்டு 250 மாணவர்களை பாராட்டி சான்றிதழ்கள் மற்றும் பிளாக் பெல்ட் வழங்கினர்.

இந்த நிகழ்ச்சியில், தமிழ்நாடு பாரா ஒலிம்பிக் சங்க பொதுச் செயலாளர் ஆல்பர்ட் பிரேம்குமார், சென்சாய், அப்துல் சுபான், சென்சாய் பீட்டர் பால், சென்சாய் சண்முகம், சென்சாய் பால முரளி, சென்சாய் சாதிக் பாஷா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter