தென் மண்டல அளவிலான பாலிடெக்னிக் விளையாட்டு போட்டி; தமிழகம் 3வது முறையாக சாம்பியன்

கோவை: விசாகப்பட்டினத்தின் பெஹ்ரா சுபாகர் பாலிடெக்னிக் கல்லூரி நடத்திய தென் மண்டல அளவிலான பாலிடெக்னிக் கல்லூரி விளையாட்டுப் போட்டியில் கோவையை சேர்ந்த மாணவர்களின் உதவியுடன் தமிழக அணி சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது.

தென் மண்டல அளவிலான பல்கலைக்கழக விளையாட்டுகளில் தமிழக அணிக்கு இது தொடர்ந்து மூன்றாவது கோப்பையாகும். ஆண்கள் பிரிவில், தமிழகம் ஒட்டுமொத்தமாக 71 புள்ளிகளைப் பெற்று சாம்பியன் பட்டம் வென்றது, கர்நாடகா 31 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தைப் பிடித்தது.

இந்த போட்டியில் தமிழ்நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்த கோவையை சேர்ந்த வீரர்கள் வி சூர்யா, கே.எஸ்.எஸ். கிரிஷாந்த், ஜி தினேஷ்குமார், என்.ஆர். ஹரிஷ், என் பிரசன்னகுமார், லோகேஷ், பி.எஸ். ஹரிகிருஷ்ணன், கே நந்த கிரண், டி சத்ய மூர்த்தி, ஏ.எஸ். சபரிகிரிவாசன், ஏ.ஜே.நகுல், கே.எம். மகமது ரியாஸ் மற்றும் பி பிரபாகரன் ஆகியோர் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் கோப்பையை வெல்ல தமிழகத்திற்கு உதவினர்.

இதே போல, பெண்கள் பிரிவில், பி லிங்கா தரணி மற்றும் பி லலிதா தேவி ஆகியோர் ஆட்டத்தின் ஒரு பகுதியாக நடைபெற்ற செஸ் போட்டியில் வெற்றி பெற்றனர். மேலும், ஆர் காவேரி 4* 100 மீட்டர் ரிலேவில் வெள்ளி பதக்கம் வென்றார்.

Newsletter