சி.டி.சி.ஏ கிரிக்கெட் லீக் போட்டி: ஸ்ரீ சக்தி மற்றும் கோவை காம்ரேட்ஸ் அணிகள் வெற்றி

கோவை: ஸ்ரீ சக்தி 'ஏ' மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சி.டி.சி.ஏ 3வது பிரிவு லீக் போட்டியில் திருமருகனின் சிறப்பான பந்துவீச்சின் மூலம் ஸ்ரீ சக்தி பொறியியல் கல்லூரி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

கோவை: ஸ்ரீ சக்தி 'ஏ' மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சி.டி.சி.ஏ 3வது பிரிவு லீக் போட்டியில் திருமருகனின் சிறப்பான பந்துவீச்சின் மூலம் ஸ்ரீ சக்தி பொறியியல் கல்லூரி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

டாஸ் வென்று முதலில் பந்து வீசிய ஸ்ரீ சக்தி பொறியியல் கல்லூரியின் திருமுருகன் தனது 10 ஓவர்களில் 7 மெய்டன்கள் உட்பட 7 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதனால் சீஹாக்ஸ் அணி 124 ரன்களுக்கு சுருண்டது.

இதையடுத்து 125 ரன்களை இலக்காக கொண்டு விளையாடிய ஸ்ரீ சக்தி பொறியியல் கல்லூரி அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான கே கபின் சஞ்சய் மற்றும் பி ஆனந்த மணிகண்டன் ஆகியோர் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் 16.3 ஓவர்கள் விக்கெட் இழப்பின்றி இலக்கை துரத்தி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர்.

இதேபோல், ரத்தினம் தொழில்நுட்ப வளாகத்தில் நடைபெற்ற 4வது பிரிவு போட்டியில், டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த கோவை காம்ரேட்ஸ் அணி 271 ரன்களை குவித்தனர். அந்த அணியின் ராஜசேகரன் அபாரமாக விளையாடி சதமடித்தார்.



பின்னர் 272 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய கோயம்புத்தூர் ரைடர்ஸ் சி.ஏ. அணி கார்த்திக்கின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்து 104 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். இதன்மூலம் கோவை காம்ரேட்ஸ் அணி 167 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

Newsletter