ஈஷா சார்பில் கிராமப்புற இளைஞர்களுக்கான வாலிபால் போட்டி; மத்வராயபுரம் அணி வெற்றி

கிராமப்புற இளைஞர்கள் மற்றும் பெண்களின் மேம்பாட்டிற்காக ஈஷா கிராமப் புத்துணர்வு இயக்கம் பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக, இளைஞர்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும் விதமாக தொண்டாமுத்தூர் சுற்றுவட்டார கிராமங்களில் விளையாட்டு போட்டிகளை மாதந்தோறும் நடத்தி வருகிறது. இதற்காக, 100-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது.

கோவை: à®ˆà®·à®¾ கிராமப் புத்துணர்வு இயக்கம் சார்பில் கோவையில் நடந்த வாலிபால் போட்டியில் 10-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த இளைஞர்கள் பங்கேற்றனர்.

கிராமப்புற இளைஞர்கள் மற்றும் பெண்களின் மேம்பாட்டிற்காக ஈஷா கிராமப் புத்துணர்வு இயக்கம் பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக, இளைஞர்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும் விதமாக தொண்டாமுத்தூர் சுற்றுவட்டார கிராமங்களில் விளையாட்டு போட்டிகளை மாதந்தோறும் நடத்தி வருகிறது. இதற்காக, 100-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், வடிவேலம்பாளையம் கிராமத்தில் இன்று (மார்ச் 1) நடந்த வாலிபால் போட்டியில் ஆலாந்துறை, மத்வராயபுரம், தேவராயபுரம், ஜாகீர்நாயக்கன்பாளையம், சாடிவயல், பேரூர் உள்ளிட்ட 10 கிராமங்களைச் சேர்ந்த இளைஞர்கள் பங்கேற்று விளையாடினர். விறுவிறுப்பாக நடந்த இறுதிப் போட்டியில் மத்வராயபுரம் அணியும் தேவராயபுரம் அணியும் மோதின. இதில் -மத்வராயபுரம் அணி 25-21, 25-23 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. முதல் 4 இடங்களை பிடித்த அணிகளுக்கு பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது.

Newsletter