கோவையில் குழந்தைகள் வன்கொடுமைக்கு எதிராக நடைபெற்ற மினி மாரத்தான் போட்டியில் உற்சாகத்துடன் பலர் பங்கேற்பு

கோவை: கோவை மணியகாரம்பாளையத்தில் உள்ள சி எம் எஸ் வித்யா மந்திர் கல்வி நிறுவனம் சார்பில் இன்று மினி மாரத்தான் 2020 போட்டிகள் நடைபெற்றது. காலை 5.30 மணிக்கு பள்ளி வளாகத்திலிருந்து மினி மாராத்தான் போட்டிகள் துவங்கியது.


கோவை: கோவை மணியகாரம்பாளையத்தில் உள்ள சி எம் எஸ் வித்யா மந்திர் கல்வி நிறுவனம் சார்பில் இன்று மினி மாரத்தான் 2020 போட்டிகள் நடைபெற்றது. காலை 5.30 மணிக்கு பள்ளி வளாகத்திலிருந்து மினி மாராத்தான் போட்டிகள் துவங்கியது. 

அங்கிருந்து நல்லாம்பாளையம், கண்ணப்பநகர், சங்கனூர், சத்தி சாலை சூர்யா மருத்துவமனை, அத்திபாளையம் பிரிவு வழியாக சின்னவேடம்பட்டி சென்று மீண்டும் பள்ளியை வந்தடையும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆண்கள் மற்றும் பெண்கள் என இப்போட்டியில் மொத்தம் 3450 க்கும் மேற்பட்டோர் ஆர்வத்துடன் இதில் பங்கேற்றனர்.

ஆண்கள் மற்றும் பெண்கள் தனித்தனியே பங்கேற்கும் 10 கிலோ மீட்டர், 5 கிலோ மீட்டர் போட்டிகளும், 16 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவ மாணவியர்கள் பங்கேற்கும் 5 கிலோ மீட்டர் பந்தயமும், மேலும் இரண்டு வயது முதல் ஏழு வயது வரை உள்ள குழந்தைகள் தங்களது பெற்றோர்களுடன் கலந்துகொள்ளும் இரண்டு கிலோ மீட்டர் பந்தயமும் நடைபெற்றது. 

போட்டிகளில் முதல் 5 இடம் பெற்றவர்களுக்கு ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும் பள்ளி மற்றும் கல்லூரியை சேர்ந்தவர்கள் குழுவாக 100 க்கும் அதிகமானோர் பங்கேற்கும் போது அவர்களுக்கு கோப்பையும் வழங்கப்பட்டது. போட்டிகளில் பங்கேற்ற அனைவருக்கும் மெடல்கள் மற்றும் சான்றிகழ்கள் வழங்கப்பட்டது. 



முன்னதாக மினி மாரத்தான் போட்டியினை, கோவை மாநகர காவல்துறை (சட்டம்-ஒழுங்கு) உதவி ஆணையாளர் (கிழக்கு) திரு.சோமசுந்தரம் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கொடியசைத்து துவக்கிவைத்தனர்.

Newsletter