சென்டிஸ் கோ கோ போட்டி: கோயம்புத்தூர் தொழில்நுட்ப நிறுவனம் சாம்பியன்

கோவை: எஸ்என்எஸ் தொழில்நுட்பக் கல்லூரி நடத்திய 11வது சென்டிஸ் (கோயம்புத்தூர், ஈரோடு, நீலகிரி மற்றும் திருப்பூர்) கோ கோ போட்டிகளில் கோவை தொழில்நுட்ப நிறுவனம் (சி.ஐ.டி) சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

கோவை: எஸ்என்எஸ் தொழில்நுட்பக் கல்லூரி நடத்திய 11வது சென்டிஸ் (கோயம்புத்தூர், ஈரோடு, நீலகிரி மற்றும் திருப்பூர்) கோ கோ போட்டிகளில் கோவை தொழில்நுட்ப நிறுவனம் (சி.ஐ.டி) சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

11வது சென்டிஸ் கோ கோ போட்டியை எஸ்.என்.எஸ் காலேஜ் ஆப் டெக்னாலஜி நடத்தியது. இந்த போட்டியில் மாநகரைச் சேர்ந்த 13 அணிகள் கோப்பைக்கு போட்டியிட்டன. நாக் அவுட் அடிப்படையில் இந்த நடத்தப்பட்ட போட்டியில், எஸ்.என்.எஸ் சி.டி, சி.ஐ.டி, கொங்கு பொறியியல் கல்லூரி மற்றும் கலைஞர் கருணாநிதி தொழில்நுட்ப நிறுவனம் ஆகிய அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றன.

எஸ்.என்.எஸ் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் கோயம்புத்தூர் தொழில்நுட்ப நிறுவனம் ஆகியவற்றுக்கு இடையிலான முதல் அரையிறுதிப் போட்டியில் 7 புள்ளிகளை பெற்று கோயம்புத்தூர் தொழில்நுட்ப நிறுவனம் இறுதிபோட்டிக்கு தகுதி பெற்றது. மற்றொரு அரையிறுதிப் போட்டியில் கலைஞர் கருணாநிதி தொழில்நுட்பக் கழகத்தை 12-5 என்ற கணக்கில் தோற்கடித்து கொங்கு பொறியியல் கல்லூரி இறுதிபோட்டிக்குள் நுழைந்தது.

இறுதிப் போட்டியில், சி.ஐ.டி கல்லூரி 2 புள்ளிகள் வித்தியாசத்தில் கொங்கு பொறியியல் கல்லூரியை வென்று சாம்பியன் ஆனது. போட்டியின் மூன்றாவது மற்றும் நான்காவது இடத்தை முறையே எஸ்.என்.எஸ் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் கலைஞர் கருணாநிதி தொழில்நுட்ப நிறுவனம் பெற்றன.

பின்னர் போட்டியின் வெற்றியாளர்களுக்கு எஸ்.என்.எஸ் தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர் டாக்டர் எஸ்.செஞ்சுரபாண்டியன் கோப்பைகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.

Newsletter