சென்டிஸ் கால்பந்து போட்டி; பி.எஸ்.ஜி தொழில்நுட்பக் கல்லூரி கோப்பையை வென்றது

கோவை: பன்னாரி அம்மன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் நடைபெற்ற கல்லூரிகளுக்கு இடையிலான 11வது சென்டிஸ் கால்பந்து போட்டியில் இந்துஸ்தான் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியை வீழ்த்தி பி.எஸ்.ஜி தொழில்நுட்பக் கல்லூரி சாம்பியன் ஆனது.

கோவை: à®ªà®©à¯à®©à®¾à®°à®¿ அம்மன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் நடைபெற்ற கல்லூரிகளுக்கு இடையிலான 11வது சென்டிஸ் கால்பந்து போட்டியில் இந்துஸ்தான் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியை வீழ்த்தி பி.எஸ்.ஜி தொழில்நுட்பக் கல்லூரி சாம்பியன் ஆனது.

சத்தியமங்கலத்தின் பன்னாரி அம்மன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்லூரி வளாகத்தில் 11வது பதிப்பு சென்டிஸ் (கோயம்புத்தூர், ஈரோட், நீலகிரி, திருப்பூர்) கல்லூரிகளுக்கு இடையிலான கால்பந்து போட்டியை நடத்தியது.

நாக் அவுட் அடிப்படையில் நடத்தப்பட்ட இந்த போட்டியில் பல்வேறு பொறியியல் கல்லூரிகளைச் சேர்ந்த சுமார் 18 அணிகள் பங்கேற்றன. இதில், நேரு இன்ஸ்டிடியூட் ஆப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி, இந்துஸ்தான் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் பி.எஸ்.ஜி தொழில்நுட்பக் கல்லூரி ஆகிய அணிகள் போட்டிகளில் முதல் மூன்று இடங்களை பிடித்தது.



நேரு இன்ஸ்டிடியூட் ஆப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜிக்கு எதிராக பி.எஸ்.ஜி தொழில்நுட்பக் கல்லூரி விளையாடிய போட்டி 2: 2 என்ற கணக்கில் சமநிலையில் இருந்தது. டைபிரேக்கரில் 4:2 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தது.

இறுதிப் போட்டியில், இந்துஸ்தான் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியை 1: 0 என்ற கணக்கில் வீழ்த்தி பி.எஸ்.ஜி தொழில்நுட்ப கல்லூரி கோப்பையை வென்றது. பின்னர் போட்டியின் வெற்றியாளர்களுக்கு கோப்பைகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

Newsletter