சி.டி.சி.ஏ பள்ளிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி; ஆர்.கே.ஸ்ரீ ரங்கம்மாள் பள்ளி சாம்பியன்

கோவை: பி.எஸ்.ஜி மருத்துவக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற 12 வயதுக்குட்பட்டோருக்கான 'ஏ.வி.லட்சுமணன் செட்டியார் டிராபி'க்கான கிரிக்கெட் போட்டியில் ஆர்.கே ஸ்ரீ ரங்கம்மாள் மேல்நிலைப்பள்ளி கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் சாம்பியன் பட்டத்தை வென்று கோப்பையை தட்டி சென்றது.

கோவை: பி.எஸ்.ஜி மருத்துவக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற 12 வயதுக்குட்பட்டோருக்கான 'ஏ.வி.லட்சுமணன் செட்டியார் டிராபி'க்கான கிரிக்கெட் போட்டியில் ஆர்.கே ஸ்ரீ ரங்கம்மாள் மேல்நிலைப்பள்ளி கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் சாம்பியன் பட்டத்தை வென்று கோப்பையை தட்டி சென்றது.

கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம் பி.எஸ்.ஜி மருத்துவக் கல்லூரி மைதானத்தில் 12 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கான மாவட்ட அளவிலான இடைநிலை பள்ளி கிரிக்கெட் போட்டியை ஏற்பாடு செய்து வருகிறது, இந்த போட்டியில் கே.எம்.எம். மெட்ரிகுலேஷன், சச்சிதானந்தா எம்.எச்.எஸ்.எஸ்., ஆர்.கே.எஸ் கல்வினிலயம் எச்.எஸ்.எஸ் மற்றும் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி வித்யாலயா எம்.எச்.எஸ்.எஸ் ஆகிய அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றது.

சச்சிதானந்தா ஜோதி நிகேதன் மற்றும் கே.எம்.எம். பள்ளிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் அரையிறுதி போட்டியில் 3 விக்கெட் வித்தியாசத்தில் சச்சிதானந்தா ஜோதி நிகேதன் பள்ளி வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு நுழைந்தது. இதேபோல, மற்றொரு அரையிறுதி போட்டியில் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி வித்யாலயாவை 28 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆர்.கே.ஸ்ரீ ரங்கம்மாள் மேல்நிலைப்பள்ளி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.

இறுதிப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆர்.கே.எஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 112 ரன்கள் எடுத்துள்ளது. ஆர்.கே.எஸ் அணியின் அதிகபட்சமாக ஹர்ஷன் ராம் 34 ரன்கள் எடுத்தார். பின்னர் விளையாடிய சச்சிதானந்தா 20 ஓவர்களில் 60 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன் மூலம் ஆர்.கே.ஸ்ரீ ரங்கம்மாள் 62 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.

Newsletter