மண்டல அளவிலான கபடி இறுதி போட்டி பாரதியார் பல்கலையில் இன்று மாலை நடைபெறுகிறது.


தென் மண்டல அளவிலான கபடி போட்டிகள் கோவை பாரதியார் பல்கலையில் 14ம் தேதி துவங்கியது. இதில் தமிழ்நாடு, கேரளா, தெலுங்கானா, ஆந்திரா,பாண்டிசேரி மாநிலங்களில் இருந்து 54 பல்கலைகழக அணிகளை  à®ªà®™à¯à®•ேற்றன. லீக் சுற்று முறையில் போட்டிகள் நடைபெற்று அதிக புள்ளிகள் பெற்ற அணி காலிறுதி மற்றும் அரை இறுதி போட்டிக்கு தகுதி பெற்றன.



இதில் கோவை பாரதியார் பல்கலைக்கழக அணி, மங்களூர் பல்கலை,மெட்ராஸ் பல்கலை கழக அணி மற்றும் மதர் தெரேசா அணி ஆகியவை அரை இறுதியில் விளையாட  à®¤à®•ுதி பெற்றது.அரை இறுதி போட்டியில் பாரதியார் பல்கலைக்கழக அணி மங்களூர் அணியுடன் மோதியது மற்றொரு போட்டியில் மதர் தெரேசா பல்கலைக்கழக அணியுடன் மெட்ராஸ் அணி மோதியது.இதில் முதல் போட்டியில் மதர் தெரேசா பல்கலைக்கழக அணி 44-18 என்ற புள்ளி கணக்கில் மெட்ராஸ் பல்கலைக்கழக அணியை வீழ்த்தியது மற்றொரு போட்டியில் மங்களூர் அணி 23-19என்ற புள்ளி கணக்கில் பாரதியார் பல்கலைக்கழக அணியை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேரியது.



இன்று மாலை நடைபெறும் இறுதி போட்டிகளில் இவ்விரு அணிகளில் யார் வெல்வார்கள் என பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 

மேலும் அரை இறுதியில் விளையாடிய நான்கு  à®…ணிகளும் வெற்றி பெற்ற அணியுடன் இணைந்து குஜராத்தில் நடைபெறவுள்ள அகில இந்திய அளவிலான போட்டியில் விளையாடும்.

Newsletter