கோவையில் வரும் பிப்., 23ம் தேதி குழந்தைகள் வன்கொடுமைக்கு எதிரான விழிப்புணர்வு மினி மராத்தான்!

கோவை: கோவையில் வரும் பிப்ரவரி 23ம் தேதி குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமை தவிர்ப்பது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த சி.எம்.எஸ் வித்யா மந்திர் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி மினி மாரத்தான் போட்டியை ஏற்பாடு செய்துள்ளது.

கோவை: கோவையில் வரும் பிப்ரவரி 23ம் தேதி குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமை தவிர்ப்பது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த சி.எம்.எஸ் வித்யா மந்திர் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி மினி மாரத்தான் போட்டியை ஏற்பாடு செய்துள்ளது.

'குழந்தைகள் வன்கொடுமைக்கு எதிராக ஓடு' என்ற கருப்பொருளை கொண்ட இந்த மினி மராத்தான் போட்டியில், பெற்றோர்களுடன் குழந்தைகளுக்கான 2 கி.மீ ஓட்டப்பந்தயம், பள்ளி சிறுவர், சிறுமிகளுக்கு 5 கி.மீ ஓட்டப்பந்தயம், ஆண்கள் மற்றும் பெண்களுக்கு 10 கி.மீ ஓட்டப்பந்தயம் என நான்கு பிரிவுகளின் கீழ் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.



இதுகுறித்து செய்தியாளர்களிடம் சி.எம்.எஸ் தலைவர் டி.ஏ. வேணுகோபால் பேசுகையில், "நாட்டில் அடிக்கடி நடைபெற்று வரும் குழந்தைகள் வன்கொடுமைக்கு எதிராக விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டு, இந்த மினி மராத்தான் போட்டியை ஏற்பாடு செய்துள்ளதாகவும் இதற்காக ஒரு சட்டை மற்றும் காலை உணவை வழங்க திட்டமிட்டுள்ளதாகவும் இந்த போட்டியில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து சுமார் 2500 பங்கேற்பாளர்களை எதிர்பார்ப்பதாக கூறினார்.

இந்த மினி மராத்தானை, சட்டம் மற்றும் ஒழுங்கு துணை காவல் ஆணையர் எல்.பாலாஜி சரவணன் கொடியசைத்துத் துவக்கி வைக்கிறார். இந்த மராத்தான் சி.எம்.எஸ் வித்யா மந்திர், மணியகாரன் பாளையத்தில் இருந்து தொடங்கி, நல்லாம் பாளையம், கண்ணப்பநகர், சங்கனூர் மற்றும் சூர்யா மருத்துவமனை வழியாக செல்லும் தொடக்க கட்டத்தில் முடிவடைகிறது. ரூ.70,000 மதிப்புள்ள ரொக்கப் பரிசுகள், சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் என இந்த மராத்தானின் பல்வேறு பிரிவுகளில் வெற்றியாளர்களுக்கு வழங்கப்படுகிறது.

Newsletter