மண்டல அளவிலான பெண்களுக்கான டேபிள் டென்னிஸ் போட்டி: ஸ்ரீ கிருஷ்ணா கல்லூரி சாம்பியன்

கோவை: செண்டைஸ் அமைப்பு நடத்திய மண்டல அளவிலான பெண்களுக்கான டேபிள் டென்னிஸ் போட்டியில் கோவை ஸ்ரீ கிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி சாம்பியன் பட்டத்தினை வென்றது.

கோவை: செண்டைஸ் அமைப்பு நடத்திய மண்டல அளவிலான பெண்களுக்கான டேபிள் டென்னிஸ் போட்டியில் கோவை ஸ்ரீ கிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி சாம்பியன் பட்டத்தினை வென்றது.

செண்டைஸ் அமைப்பு கோவை, திருப்பூர், ஈரோடு மற்றும் நீலகிரி மாவட்டங்களில் உள்ள பொறியியல் கல்லூரிகளுக்கான மண்டல அளவிலான டேபிள் டென்னிஸ் போட்டியினை சத்தியமங்கலத்தில் உள்ள பண்ணாரி பொறியியல் கல்லூரியில் நடத்தியது. இதில் இம்மாவட்டங்களில் இருந்து பொறியியல் கல்லூரிகளின் அணிகள் போட்டியில் பங்கேற்றன.

இறுதிப் போட்டியில் கோவைப்புதூர் ஸ்ரீ கிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லூரியினை வென்று சாம்பியன் பட்டத்தினை தட்டிச்சென்றது. போட்டியில் வெற்றி பெற்ற இவர்களை இக்கல்விக் குழுமங்களின் நிர்வாக அறங்காவலர் எஸ்.மலர்விழி, முதன்மை நிர்வாக அதிகாரி முனைவர்.கே.சுந்தரராமன், முதல்வர் முனைவர் ஸ்ரீனிவாச ஆளவந்தார், விளையாட்டு துறை இயக்குனர் மாரிச்செலவம் உட்பட பலர் பாராட்டினர்.

Newsletter