மாநில அளவில் கல்லூரிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி..! ஸ்ரீ கிருஷ்ணா கல்லூரியில் தொடங்கியது

கோவை: உடற்கல்வித் துறையின் 2வது ஸ்ரீ கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி டிராபிக்கான' மாநில அளவில் கல்லூரிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி அக்கல்லூரி மைதானத்தில் நேற்று தொடங்கியது.

கோவை: உடற்கல்வித் துறையின் 2வது ஸ்ரீ கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி டிராபிக்கான' மாநில அளவில் கல்லூரிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி அக்கல்லூரி மைதானத்தில் நேற்று தொடங்கியது.

நாக் அவுட் அடிப்படையில் நடத்தப்படும் இந்த போட்டியில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த சுமார் 40 கல்லூரி அணிகள் பங்கேற்கின்றன. இந்த போட்டியை ஸ்ரீ கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் டாக்டர் பி பேபி ஷகிலா தொடங்கி வைத்தார்.

இந்த போட்டியின் தொடக்க ஆட்டத்தில், கோயம்புத்தூர் இன்ஸ்டிடியூட் ஆப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி மற்றும் நேரு இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி ஆகிய அணிகள் முதல் போட்டியில் விளையாடியது.

முதலில் பேட் செய்த நேரு ஐடி அணி 20 ஓவர்கள் முடிவில் 115 ரன்கள் எடுத்தது. சி.ஐ.டி. அணியின் பந்து வீச்சாளர் விஸ்வந்த் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பின்னர் களமிறங்கிய சி.ஐ.டி. அணி, ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து 14வது ஓவரில் இலக்கை எட்டியது. இதன் மூலம் கோயம்புத்தூர் இன்ஸ்டிடியூட் ஆப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

போட்டியின் பிரத்யேகப் புகைப்படங்கள்:












இதேபோல், கற்பகம் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி மற்றும் யுனைடெட் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி அணிகள் மோதிய போட்டியில் யுனைடெட் கல்லூரி அணி 51 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Newsletter