கோவையில் சர்வதேச சைக்கிள் போட்டி திருவிழா நிறைவு; 670 சைக்கிள் ஓட்டுநர்கள் பங்கேற்பு!

கோவை: கோவையில் பினாக்கிள் விளையாட்டு மற்றும் நலச் சங்கம் பெருமையுடன் வழங்கிய 7ம் ஆண்டு ‘‘தி எம்விஎஸ் கார்னிவெல் 2020’’ சைக்கிள் போட்டியை எம்விஎஸ் கிரிட்டோரியம், தமிழ்நாடு சைக்கிளிங் சங்கத்துடன் இணைந்து, செட்டிபாளையம் கரிமோட்டார் ஸ்பீடு வே யில் நேற்று நடைபெற்றது.

கோவை: கோவையில் பினாக்கிள் விளையாட்டு மற்றும் நலச் சங்கம் பெருமையுடன் வழங்கிய 7ம் ஆண்டு ‘‘தி எம்விஎஸ் கார்னிவெல் 2020’’ சைக்கிள் போட்டியை எம்விஎஸ் கிரிட்டோரியம், தமிழ்நாடு சைக்கிளிங் சங்கத்துடன் இணைந்து, செட்டிபாளையம் கரிமோட்டார் ஸ்பீடு வே யில் நேற்று நடைபெற்றது.



எம்விஎஸ் என்டியூரா, ரோடு அல்லாத போட்டியை, பந்தய சாலையை செட்டிபாளையத்தில் உருவாக்க நடத்தப்பட்டுள்ளது. இப்போட்டியை ஸ்காட் சைக்கிள், டிஸ்ஸாட், பீகா ஸ்டீல்ஸ்,டைட்டான் பெயின்ட்ஸ், டைலக்ஸ், எல்ஆர்டி, லீட், பயோடா டெக்னாலஜிஸ், தி ரெஸிடென்ஸி டவர் போன்றவை இணைந்து நடத்தின.



இப்போட்டியானது, தொழில்ரீதியாக பந்தய வீரர்கள், ஆண்கள், பெண்கள், 18 வயதுக்குட்பட்ட குழந்தைகள், 40 வயதுக்கு மேற்பட்ட மாஸ்டர்ஸ் ஆண்கள், பெண்கள், 55 வயதுக்கு மேற்பட்ட முதியோர் என பல்வேறு பிரிவுகளில் நடத்தப்பட்டது. 



இதில் மொத்த ரொக்க பரிசாக ரூ.2,40,000 வழங்கப்பட்டது.

இறுதிச்சுற்று ஸ்காட் எக்ஸ்சி தொடர், எம்விஎஸ் என்டியூரா 2020, போட்டி தனியாக நடந்தது. இதில் முதல் 5 இடங்களை பெற்றவர்களுக்கு ஸ்காட் ஸ்போர்ட்ஸ் இன்டியா ரொக்க பரிசுகள் வழங்கப்பட்டது. போட்டியானது, ரிலே ரேஸ், 18 வயதுக்குட்பட்ட சிறுவர்கள், மகளிர், ஆண்கள், மாஸ்டர் பெண்கள், மாஸ்டர் ஆண்கள், எலைட், முதியோர் ஆண், பெண்கள் என்ற பிரிவுகளின் கீழ் நடத்தப்பட்டது.

இந்த போட்டி குறித்து ஸ்காட் ஸ்போர்ட்ஸ் இன்டியாவின் மேலாளர் ஜெய்மின் ஷா கூறுகையில், ’’எம்விஎஸ் சைக்கிளிங் திருவிழாவில் இணைந்து செயலாற்றுவதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறோம். நாட்டிலேயே சிறந்த விளையாட்டு போட்டிகளில் இதுவும் ஒன்று. ஒவ்வொரு ஆண்டும் புதிய திறமையானவர்கள் இதில் வருகின்றனர். இந்தியாவில் சைக்கிள் ஓட்டுவது அதிகரித்து வருகிறது. சைக்கிள் போட்டியும் அதிகரித்து வருகிறது. பங்கேற்போர் மத்தியிலும் ஆர்வம் கூடி வருகிறது. அதிக எண்ணிக்கையில் பங்கேற்கின்றனர்,’’ என்றார்.

Newsletter