இந்திய ராணுவ தெற்கு மண்டல பிரிவின் சார்பில் கோவையில் நடைபெற்ற கிராஸ் கன்ட்ரி போட்டி


இந்திய ராணுவத்தில் தெற்கு மண்டல பிரிவில் உள்ள அனைத்து பிரதேச ராணுவப்பிரிவிற்கும் கிராஸ் கன்ட்ரி  (cross country) என்னும் போட்டி கோவையில் நடைபெற்றது. இதனை பிரதேச ராணுவப்படை குழுமம், தெற்கு மண்டலம் கமேண்டர் பிரிகேடியர் டி.எஸ்.சந்து கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இந்தப் போட்டியில் 11 பிரதேச ராணுவப் படை பிரிவின் அணிகள் கலந்துகொண்டனர். இதில் 108-வது பட்டாளியன் அணி மஹார் ரெஜிமண்ட் முதலிடம் பிடித்தது. இதைத்தொடர்ந்து, 110 பட்டாளியன் அணி மெட்ராஸ் ரெஜிமண்ட் இரண்டாவது இடம் பிடித்தது.



இதற்கான கோப்பை மற்றும் பதக்கங்களை தெற்கு மண்டல பிரதேச ராணுவப்படை குழுமத்தின் கமேண்டர் பிரிகேடியர் டி.எஸ்.சந்து வழங்கினார்.

Newsletter