சி.டி.சி.ஏ கிரிக்கெட் லீக் போட்டி; ஸ்ரீ ராமகிருஷ்ணா கிரிக்கெட் அறக்கட்டளை வெற்றி

கோவை: பி.எஸ்.ஜி மருத்துவக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற மாவட்ட அளவிலான சி.டி.சி.ஏ கிரிக்கெட் லீக் போட்டியில், ஜாலி ரோவர்ஸ் கிரிக்கெட் கிளப்பை 9 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஸ்ரீ ராமகிருஷ்ணா கிரிக்கெட் அறக்கட்டளை அணி வெற்றி பெற்றது.

ஸ்ரீ ராமகிருஷ்ணா கிரிக்கெட் அறக்கட்டளை மற்றும் ஜாலி ரோவர்ஸ் கிரிக்கெட் கிளப் அணிகள் விளையாடிய இந்த போட்டியில், முதலில் பேட்டிங் செய்த ஸ்ரீ ராமகிருஷ்ணா கிரிக்கெட் அறக்கட்டளை எஸ்.ராதாகிருஷ்ணன் மற்றும் சி சத்தியநாராயணன் ஆகியோரின் சிறப்பான பேட்டிங்கின் மூலம் 50 ஓவர்களில் 244 குவித்தது.

பின்னர் 244 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ஜாலி ரோவர்ஸ் கிரிக்கெட் கிளப் அணி 50 ஓவர்களில் 235 ரன்களை மட்டுமே எடுத்து 9 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

இதேபோல, ஸ்ரீ சக்தி இன்ஸ்டிடியூட் ஆப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற மற்றொரு முதல் பிரிவு லீக் போட்டியில், ரெயின்போ கிரிக்கெட் கிளப்பை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சூர்யபாலா கிரிக்கெட் கிளப் அணி வெற்றி பெற்றது.

Newsletter