தேசிய அளவிலான விளையாட்டு போட்டி: கோவை மாணவி வெண்கலப் பதக்கம் வென்று அசத்தல்..!

டெல்லியில் நடைபெற்ற தேசிய அளவிலான பள்ளி விளையாட்டு போட்டியில் பங்கேற்ற கோவை சிலம்பாலயா சிலம்பம் அகாடமி மாணவி ஷைனி ரிச் வெண்கலப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற தேசிய அளவிலான பள்ளி விளையாட்டு போட்டியில் பங்கேற்ற கோவை சிலம்பாலயா சிலம்பம் அகாடமி மாணவி ஷைனி ரிச் வெண்கலப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.

இந்திய பள்ளிகளுக்கான விளையாட்டுக் குழுமம் (எஸ்ஜிஎஃப்ஐ) டெல்லியில் பள்ளி மாணவர்களுக்காக '65வது தேசிய பள்ளி விளையாட்டு' போட்டிகளை ஏற்பாடு செய்து வருகிறது. இதில் 40 கி.கி பிரிவில் கோவையை சேர்ந்த தையல்காரரின் மகள் ஷைனி ரிச் சப் ஜூனியரில் நடந்த குராஷ் நிகழ்வில் பங்கேற்றார்.

சி.எஸ்.ஐ பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆறாம் வகுப்பு மாணவி ஷைனி ரிச் கடந்த சில ஆண்டுகளாக மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் விளையாடி வருகிறார். எஸ்ஜிஎஃப்ஐ நடத்திய மாநில அளவிலான போட்டிகளில் ஷைனி சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றதால், தேசிய அளவிலான போட்டிகளில் தமிழக அணியை பிரதிநிதித்துவப்படுத்த தேர்வு செய்யப்பட்டார்.

இந்நிலையில், 40 கிலோ பிரிவின் கீழ் போட்டியிட்ட ஷைனி வெண்கலப் பதக்கங்களைப் பெற்று, நகரத்திற்கு பெருமை சேர்த்துள்ளார். முன்னதாக கரூரின் வெற்றி விநாயகா மெட்ரிக் பள்ளியில் நடைபெற்ற மாநில அளவிலான சிலம்பம் போட்டியில் ஷைனி வெண்கலப் பதக்கம் வென்றார்.

தேசிய அளவிலான போட்டிகளில் வெண்கலப் பதக்கம் வென்ற அவருக்கு சிலம்பாலயா விளையாட்டு மற்றும் பொது நல அறக்கட்டளையின் பயிற்சியாளர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

Newsletter