மாநில அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்ற ஆதிதிராவிட பள்ளி மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டு

கோவை: மாநில அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்ற ஆதிதிராவிட பள்ளி மாணவிகளுக்கு சான்றிதழ்கள், காசோலை மற்றும் பதக்கங்களை கோவை மாவட்ட வருவாய் வழங்கினார்.

கோவை: மாநில அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்ற ஆதிதிராவிட பள்ளி மாணவிகளுக்கு சான்றிதழ்கள், காசோலை மற்றும் பதக்கங்களை கோவை மாவட்ட வருவாய் வழங்கினார்.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் மனிதநேய வார விழா இன்று துவங்கி ஒருவார காலம் நடக்கிறது. இன்று அதன் துவக்க விழா நிகழ்ச்சி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதனை மாவட்ட வருவாய் அலுவலர் ராமதுரை முருகன் துவக்கி வைத்தார்.

கரூரில் மாநில அளவிலான ஜூடோ போட்டிகள் கடந்த 20ம் தேதி நடைபெற்றது. தமிழகத்தில் இருந்து இருபது மாவட்டங்களை சேர்ந்த பள்ளி மாணவிகள் பங்கேற்றனர். இதில் புலியகுளம் ஆதி திராவிடர் தங்கும் விடுதியில் இருந்து கோவை மாநகராட்சி பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவிகள் ஈஸ்வரி மூன்றாம் இடத்தையும், சாருசித்ரா இரண்டாம் இடம் பெற்றனர். மதுரையில் நடைபெற்ற மாநில அளவிலான தடகள போட்டியில் நிஷாந்தினி இரண்டாம் இடம் பிடித்தார்.



இவர்களுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் பதக்கம் மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார். இதன் பின்னர் பழங்குடியினர் தங்கள் பாரம்பரிய இசையை வாசித்து நடனமாடியதை அங்கிருந்த பொதுமக்கள் வெகுவாக ரசித்தனர். மேலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டிருந்த அரங்கில் அரசு சார்பில் வழங்கப்படும் திட்ட உதவிகள் குறித்த அறிவிப்புகள் வைக்கப்பட்டு இருந்தது.

கடந்த பல வருடங்களாக இந்த விழா ஜனவரி மாத இறுதியில் நடத்தப்பட்டு வருவதாகவும் ஆனால் இது குறித்த பழங்குடியினருக்கு முறையான தகவல் செல்வதில்லை எனவும் பெயரளவிற்கு இது நடத்தப்பட்டு வருவதாகவும் பழங்குடியின மக்களின் பாரம்பரிய இசை அழிந்து வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டினர்.

Newsletter