கோவையில் மாநில அளவிலான டென்னிஸ் போட்டி: 175க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு

கோவை: லெவோ ஸ்போர்ட்ஸ் சார்பில் லெவோ விளையாட்டு வளாகத்தில் நடைபெற்ற ரைசிங் ஸ்டார் டிராபிக்கான மாநில அளவிலான தரவரிசை அல்லாத டென்னிஸ் போட்டியில் 175க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

கோவை: லெவோ ஸ்போர்ட்ஸ் சார்பில் லெவோ விளையாட்டு வளாகத்தில் நடைபெற்ற ரைசிங் ஸ்டார் டிராபிக்கான மாநில அளவிலான தரவரிசை அல்லாத டென்னிஸ் போட்டியில் 175க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.



நாக்அவுட் அடிப்படையில் 8 வயது முதல் 16 வயதுக்குட்பட்டவர்கள் மற்றும் ஆண்கள் ஒற்றையர் பிரிவுகளுக்கு இந்த போட்டிகள் நடத்தப்பட்டது. வார இறுதிப் போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 175 வீரர்கள் பங்கேற்கின்றனர்.



பல்வேறு பிரிவுகளின் வெற்றியாளர்கள்:

ரெட் பால் மினி கோர்ட் இறுதிப் போட்டியில், முகுந்தை 15-5 என்ற கணக்கில் நரேன் மித்ரென் தோற்கடித்தார். 10 வயதுக்குட்பட்ட பிரிவில், ஸ்கந்தனிதி இறுதிப் போட்டியில் மித்ரவிந்தாவை 6-1 என்ற கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றார்.



12 வயதுக்குட்பட்ட பிரிவில், ஸ்கந்தனிதியை 6-3 என்ற கோல் கணக்கில் தோற்கடித்து கெளதம் கோப்பையை வென்றார். மேலும் 14 வயதிற்குட்பட்ட பிரிவில், சிவகுரு 6-2 என்ற கோல் கணக்கில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.



16 வயதிற்குட்பட்ட பிரிவில், 6-3 என்ற கோல் கணக்கில் மாயாவை வீழ்த்தி ஜெய்சரண் வெற்றி பெற்றார். ஆண்கள் ஒற்றையர் இறுதிப் போட்டியில் அரவிந்த் 6-1 என்ற கோல் கணக்கில் ஸ்டீபன் ராஜை தோற்கடித்தார். ஆண்கள் இரட்டையர் இறுதிப் போட்டியில், ஆண்டி மற்றும் பொன்னுசாமி சிவகாமி ஆகியோர் அரவிந்த் மற்றும் ராஜேஷ் ஜோடியை 6-2 என்ற கோல் கணக்கில் தோற்கடித்து ஆண்கள் இரட்டையர் பிரிவில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினர்.



இறுதியாக, பல்வேறு பிரிவுகளில் வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பைகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.



Newsletter