சி.டி.சி.ஏ கிரிக்கெட் லீக் போட்டி; பிரஜீஷின் அசத்தல் பந்துவீச்சால் சச்சின் கிரிக்கெட் கிளப் அணி வெற்றி

கோவை: பி.எஸ்.ஜி மருத்துவக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற மாவட்ட அளவிலான சி.டி.சி.ஏ கிரிக்கெட் லீக் போட்டியில், கோயம்புத்தூர் ஃப்ரெண்ட்ஸ் கிரிக்கெட் கிளப்பை வீழ்த்தி சச்சின் கிரிக்கெட் கிளப் அணி வெற்றி பெற்றது.

கோயம்புத்தூர் பிரண்ட்ஸ் சிசி (சிஎஃப்சிசி) மற்றும் சச்சின் கிரிக்கெட் கிளப் அணி விளையாடிய இந்த போட்டியில், முதலில் பந்துவீசிய சச்சின் சி.சி.யின் பந்து வீச்சாளர்களான பிரஜீஷ் மற்றும் பி.ராஜசேகர் இருவரின் சிறப்பான பந்துவீச்சில் கோயம்புத்தூர் ஃப்ரெண்ட்ஸ் கிரிக்கெட் கிளப் அணி 26.3 ஓவர்களில் 76 ரன்களுக்கு சுருண்டது.

பின்னர் விளையாடிய சச்சின் கிரிக்கெட் கிளப் அணி 13 ஓவர்களில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை எட்டி எளிதில் வெற்றி பெற்றது. அந்த அணியின் மோகன் ஆட்டமிழக்காமல் 51 ரன்கள் எடுத்தார்.

இதேபோல, பி.எஸ்.ஜி மருத்துவக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற 4வது பிரிவு லீக் போட்டியில், அக்ஷயா கல்லூரியை பி.எஸ்.ஜி டெக்னாலஜி சி.சி 9 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது.

Newsletter