பொங்கலை முன்னிட்டு 3 நாட்கள் நடைபெற்ற மாபெரும் ஐவர் கால் பந்து போட்டிகள் நிறைவு; அருள்தாஸ் அகாடமி அணி சாம்பியன்

கோவை: கோவை புலியகுளம் கால்பந்து கழகத்தின் சார்பில் பொங்கல் திருநாளை முன்னிட்டு நடைபெற்ற ஐவர் கால்பந்து போட்டியானது நேற்று பரிசளிப்பு விழாவுடன் நிறைவு பெற்றது.


கோவை: à®•ோவை புலியகுளம் கால்பந்து கழகத்தின் சார்பில் பொங்கல் திருநாளை முன்னிட்டு நடைபெற்ற ஐவர் கால்பந்து போட்டியானது நேற்று பரிசளிப்பு விழாவுடன் நிறைவு பெற்றது.



புலியகுளம் கால்பந்து கழகம் நடத்தும் தென்னிந்திய அளவிலான மாபெரும் ஐவர் கால்பந்து போட்டியானது கடந்த 20 ஆண்டுகளாக பொங்கல் திருநாளை முன்னிட்டு நடைபெற்று வருகிறது. அதேபோல, இந்தாண்டும் கடந்த மூன்று நாட்களாக போட்டியானது புனித அந்தோணியார் பள்ளியில் உள்ள மைதானத்தில் இரவு பகலாக நடைபெற்றது.

இந்த போட்டிகளில் கேரளா, கர்நாடகா ஆந்திரா போன்ற மாநிலங்களில் இருந்தும், தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் என மொத்தம் 64 குழுவினர்கள் என 640 வீரர்கள் மூன்று பிரிவுகளில் விளையாடி தங்களின் திறமைகளை வெளிப்படுத்தினர். இந்த நிலையில், நேற்று இறுதி போட்டிகள் முடிவடைவதையடுத்து நிறைவு விழா நடைபெற்றது.



முன்னதாக சிலம்பாலயா குழுவினர் பல்வேறு வகையான சிலம்ப கலைகளையும், பல்வேறு சாகசங்களையும் பார்வையாளர்கள் மத்தியில் காண்பித்தனர். இதைதொடர்ந்து கால்பந்து போட்டியில் பெண்களை ஊக்குவிக்கும் நோக்கத்தில் பெண் சிறுமியர்கள் மைதானத்தில் மாதிரி கால்பந்து விளையாடினர்.

பின்னர் இறுதிப் போட்டியானது பலத்த ஆரவாரத்துடன் தொடங்கியது. இதில் அருள்தாஸ் அகாடமி போத்தனூர் அணியினரும் புலியகுளம் கால்பந்து கழகம் பி அணியினரும் கடும் போட்டி போட்டுக்கொண்டு தங்களது இலக்கை அடைய முயற்சித்தனர். à®‡à®¨à¯à®¨à®¿à®²à¯ˆà®¯à®¿à®²à¯, அருள்தாஸ் அக்காடமி அணியினர் இரண்டுக்கு ஒன்று என்ற கோல் கணக்கில் புலியகுளம் அணியினரை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.



இதைத்தொடர்ந்து, வெற்றி பெற்ற வீரர்களுக்கும், குழுவினருக்கும் புலியகுளம் கால்பந்து கழகத்தின் சார்பில் கேடயங்களும் பரிசு தொகைகளும் வழங்கப்பட்டது. மேலும், கால்பந்து போட்டியின்போது போட்டியாளர்களுக்கு பல்வேறு முதலுதவிகள் செய்த 108 ஆம்புலன்ஸ் நிர்வாகத்திற்கும் ஊழியர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக நினைவுப் பரிசும் வழங்கப்பட்டது.

Newsletter