கோவை புலியகுளம் கால்பந்து கழகம் நடத்தும் ஐவர் கால்பந்து: முதல் சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறது

கோவை: கோவை புலியகுளம் கால்பந்து கழகம் நடத்தும் தென்னிந்திய அளவிலான மாபெரும் ஐவர் கால்பந்து போட்டிகளின் முதல் சுற்று போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.


கோவை: கோவை புலியகுளம் கால்பந்து கழகம் நடத்தும் தென்னிந்திய அளவிலான மாபெரும் ஐவர் கால்பந்து போட்டிகளின் முதல் சுற்று போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.

தமிழர் திருநாளாம் பொங்கல் விழாவை முன்னிட்டு புலியகுளம் கால்பந்து கழகம் நடத்தும் தென்னிந்திய அளவிலான மாபெரும் ஐவர் கால்பந்து போட்டிகள் கோவை புலியகுளம் புனித அந்தோணியார் பள்ளி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.



புலியகுளம் கால்பந்து கழகம் நடத்தும் தென்னிந்திய அளவிலான மாபெரும் ஐவர் கால்பந்து போட்டியானது கடந்த 20 ஆண்டுகளாக பொங்கல் திருநாளை முன்னிட்டு நடைபெற்று வருகிறது.

அதேபோல, இந்த ஆண்டும் இன்று காலை 7 மணியளவில் முதல் சுற்று போட்டிகள் தொடங்கியது. இந்த போட்டிகளை புனித அந்தோணியார் திருத்தலத்தின் பங்குதந்தை ராயப்பர் துவங்கி வைத்தார்.

இந்த போட்டிகள் இன்று, நாளை, நாளை மறுநாள் என மூன்று நாட்கள் நடைபெற உள்ளது.



மேலும், நடைபெற்று வரும் போட்டிகளில் கேரளா, கர்நாடகா ஆந்திரா போன்ற மாநிலங்களில் இருந்தும் அதேபோல தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் என மொத்தம் 64 குழுவினர்கள் என 640 வீரர்கள் மூன்று பிரிவுகளில் விளையாட உள்ளனர்.

தற்போது முதல் கட்டமாக நடைபெற்ற போட்டிகளில் 8 குழுவினர் வெற்றி பெற்றுள்ளனர்.



மேலும் இன்று நடைபெற்ற போட்டியில் எதிர்பாராத விதமாக விபத்துக்குள்ளான போட்டியாளரை 108 ஆம்புலன்ஸ் குழுவினர் முதலுதவி கொடுத்து மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

தொடர்ந்து நடைபெற்று வரும் முதல் சுற்றுப் போட்டிகள் நிறைவடைந்து காலிறுதிப் போட்டிகள் துவங்க உள்ளதாக ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Newsletter