சி.டி.சி.ஏ கிரிக்கெட் லீக் போட்டி: மிராக்கிள் கிரிக்கெட் கிளப் 29 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

கோவை: பொள்ளாச்சியின் நாச்சிமுத்து பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற டிஎன்சிஏ சிடிசிஏ மூன்றாம் பிரிவு லீக் போட்டியில் என்ஐஏ கல்வி நிறுவனங்கள் கிரிக்கெட் கிளப்பை 29 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி மிராக்கிள் கிரிக்கெட் கிளப் வெற்றி பெற்றது.

கோவை: பொள்ளாச்சியின் நாச்சிமுத்து பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற டிஎன்சிஏ சிடிசிஏ மூன்றாம் பிரிவு லீக் போட்டியில் என்ஐஏ கல்வி நிறுவனங்கள் கிரிக்கெட் கிளப்பை 29 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி மிராக்கிள் கிரிக்கெட் கிளப் வெற்றி பெற்றது.

கோவையில் மாவட்ட கிரிக்கெட் சங்கம் தனது லீக் போட்டிகளை நகரம் மற்றும் பொள்ளாச்சியின் பல்வேறு மைதானங்களில் நடத்தியுள்ளது. பொள்ளாச்சியில் நடைபெற்ற மூன்றாவது பிரிவு போட்டியில், என்.ஐ.ஏ மற்றும் மிராக்கிள் அணிகள் மோதின.

இதில் முதலில் பேட்டிங் செய்த மிராக்கிள் சிசி 46.3 ஓவர்களில் 231 ரன்கள் எடுத்தது. பின்னர் விளையாடிய என்ஐஏ கல்வி நிறுவனங்கள் 39.5 ஓவர்களில் 202 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன் மூலம் 29 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியைப் பதிவு செய்தது.

இதேபோல் ரத்தினம் தொழில்நுட்ப வளாகத்தில் நடைபெற்ற இரண்டாவது பிரிவு போட்டியில், ரெயின்போ கே.எம்.பி கிரிக்கெட் கிளப்புக்கு எதிரான ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் ராஜசேகர் மணி நினைவு கிரிக்கெட் கிளப் (ஆர்.எம்.எம்.சி.சி) வெற்றி பெற்றது. முதலில் ஆடிய ரெயின்போ கே.எம்.பி அணி ஆர்.எம்.எம்.சி.சியின் அபார பந்துவீச்சால் 39.2 ஓவர்களில் 116 ரன்களுக்கு சுருண்டது. குறைந்த இலக்குடன் விளையாடிய ஆர்.எம்.எம்.சி.சி 12 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்த போதிலும் நடுத்தர வரிசையில் களமிறங்கிய வீரர்களின் நிதான ஆட்டத்தால் 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி வாகை சூடியது.

Newsletter