மாவட்ட அளவில் பள்ளிகளுக்கான கிரிக்கெட் போட்டி: ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி வித்யாலயா சாம்பியன்

கோவை: கோவையில் மாவட்ட கிரிக்கெட் சங்கம் நடத்தும் 'கோயம்புத்தூர் யுனைடெட் ரவுண்ட் டேபிள் 186 டிராபிக்கான மாவட்ட அளவில் பள்ளிகளுக்கான கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா எம்.எச்.எஸ்.எஸ் அணியை வீழ்த்தி ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி வித்யாலயா அணி சாம்பியன் ஆனது.

கோவையில் மாவட்ட கிரிக்கெட் சங்கம் ஏற்பாடு செய்துள்ள பள்ளிகளுக்கு இடையிலான போட்டி பி.எஸ்.ஜி மருத்துவக் கல்லூரி மைதானத்தில் திங்கள்கிழமை தொடங்கியது. இதில் ஸ்ரீ ராமகிருஷ்ணா, லிசியக்ஸ் எம்.எச்.எஸ்.எஸ், ஆர்.கே.எஸ் கல்வினிலயம் எச்.எஸ்.எஸ் மற்றும் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி வித்யாலயா எம்.எச்.எஸ்.எஸ் ஆகிய அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றது.

இறுதிப்போட்டியில், ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி வித்யாலயா மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா எம்.எச்.எஸ்.எஸ்., கோப்பைக்காக மோதினர், இதில் முதலில் பேட்டிங் செய்த ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி வித்யாலயா, ஆரம்பத்தில் விக்கெட்டுகளை இழந்த போதிலும் பின் வரிசையில் களமிறங்கிய நிர்மல் குமாரின் சிறந்த பேட்டிங்கால் 158 ரன்கள் எடுத்தது.

பின்னர் விளையாடிய ஸ்ரீ ராமகிருஷ்ணா அணி வீரர்கள் ஜெயேந்திர சரஸ்வதி வித்யாலயாவின் வீரர் நிர்மல் குமாரின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இதனால் 37 ஓவர்களில் 152 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 6 ரன்களில் தோல்வியை தழுவினர். நிர்மல் குமார் அதிகபட்சமாக 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

போட்டியின் பிரத்யேகப் புகைப்படங்கள்:

Newsletter