சகோதயா பள்ளியின் சார்பில் 39ம் ஆண்டு தடகளப் போட்டி துவக்கம்


சகோதயா பள்ளியின் சார்பில் 39ம் ஆண்டு தடகளப் போட்டி வியாழனன்று (இன்று) துவங்கியது. இப்போட்டியில் வெற்றி பெறுவோருக்கான  à®ªà®°à®¿à®šà®¿à®©à¯ˆ சகோதயா பள்ளியுடன் இணைந்து ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்விக் குழுமம் வழங்க உள்ளது.

இன்று முதல் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு நடைபெற உள்ள இப்போட்டியில் மாவட்டம் முழுவதும் இருந்து 77 பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 2500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றுள்ளனர்.



இப்போட்டியினை ஒலிம்பிக் வெற்றியாளர், பத்மஸ்ரீ மற்றும் அர்ஜுனா விருது பெற்ற முன்னாள் இந்தியன் ஹாக்கி குழு தலைவர் வாசுதேவன் பாஸ்கரன் தேசிய கொடியேற்றி துவக்கி வைத்தார்.



சகோதயா பள்ளி தலைவர் கே.நவமணி ஒலிம்பிக் கொடியேற்றி வைத்தார். துணை தலைவர் சுகுனா தேவி, சகோதயா பள்ளிக் கொடியினை ஏற்றி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், நேசனல் மாடல் பள்ளி, பிஎஸ்ஜி பள்ளி உள்ளிட்ட பல்வேறு பள்ளி ஆசிரியர்கள்  à®®à®±à¯à®±à¯à®®à¯ மாணவர்கள் பங்கேற்றனர்

Newsletter