மாவட்ட அளவிலான கூடைப்பந்து போட்டி: அரையிறுதிக்குள் நுழைந்தது சர்வஜனா மற்றும் ஆர்.கே.எஸ்

கோவை: ராக்கர்ஸ் கூடைப்பந்து கழகத்துடன் லயன்ஸ் கிளப் ஆஃப் கோயம்புத்தூர் ஓரியன் இணைந்து நடத்தும் 'ஓரியன் டிராபி'க்கான மாவட்ட அளவிலான கூடைப்பந்து போட்டியில் சர்வஜனா மேல்நிலைப்பள்ளி மற்றும் ஆர்.கே.எஸ் மேல்நிலைப்பள்ளி அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன.

கோவை: ராக்கர்ஸ் கூடைப்பந்து கழகத்துடன் லயன்ஸ் கிளப் ஆஃப் கோயம்புத்தூர் ஓரியன் இணைந்து நடத்தும் 'ஓரியன் டிராபி'க்கான மாவட்ட அளவிலான கூடைப்பந்து போட்டியில் சர்வஜனா மேல்நிலைப்பள்ளி மற்றும் ஆர்.கே.எஸ் மேல்நிலைப்பள்ளி அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன.

நாக் அவுட் மற்றும் லீக் அடிப்படையில் நடத்தப்படும் இந்த போட்டிகளில் பள்ளி மாணவர்கள், பெண்கள் மற்றும் ஆண்கள் அடங்கிய சுமார் 60 அணிகள் பங்கேற்கின்றன. இந்த போட்டிகள் சப் ஜூனியர், ஜூனியர் ஆண்கள் மற்றும் பெண்கள் என பல்வேறு பிரிவுகளின் கீழ் நடத்தப்படுகிறது. இந்த போட்டியை கே.வெங்கடேசன், கோயம்புத்தூர் ஓரியனின் லயன்ஸ் கிளப்பின் தலைவர் எம்.ஜே.எஃப் சுந்தர் மற்றும் வாசவி கிளப்பின் தலைவர் எம்.ஜே.எஃப் ஜெயபிரகாஷ் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

இந்த நிலையில், சிறுவர்களுக்கான காலிறுதிப் போட்டிகள் நேரு ஸ்டேடியத்திற்கு அருகிலுள்ள சிடிபிஏ கூடைப்பந்தாட்ட மைதானத்தில் கடந்த புதன்கிழமை நடைபெற்றது. இதில், டெக்ஸிட்டிக்கு எதிரான போட்டியில் 45-2 என்ற கணக்கில் வெற்றியைப் பதிவு செய்த சர்வஜனா பள்ளி முதல் நான்கு இடங்களை பிடித்தது. மறுபுறம் மல்லயன் மெட்ரிகுலேஷன் உயர்நிலைப்பள்ளியை 38-21 என்ற கணக்கில் தோற்கடித்து ஆர்.கே.எஸ் பள்ளி அரையிறுதிக்கு நுழைந்தது.

இதேபோல், பெண்கள் பிரிவில், அல்வெர்னியா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி 68-2 என்ற கோல் கணக்கில் பெர்க்ஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியை தோற்கடித்து அரையிறுதிக்கு தகுதி பெற்றது மற்றும் ஜெயலட்சுமி ஸ்போர்ட்ஸ் அகாடமி 51-24 என்ற கணக்கில் ஒய்.எம்.சி.ஏவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.

போட்டியின் பிரத்யேகப் புகைப்படங்கள்:























Newsletter