மாவட்ட அளவில் பள்ளிகளுக்கான கிரிக்கெட்: இறுதிப்போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மற்றும் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி வித்யாலயா அணி பலப்பரீட்சை

கோவை: கோவையில் மாவட்ட கிரிக்கெட் சங்கம் நடத்தும் 'கோயம்புத்தூர் யுனைடெட் ரவுண்ட் டேபிள் 186 டிராபிக்கான மாவட்ட அளவில் பள்ளிகளுக்கான கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டிக்கு ஸ்ரீ ராமகிருஷ்ணா எம்.எச்.எஸ்.எஸ் மற்றும் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி வித்யாலயா எம்.எச்.எஸ்.எஸ் அணிகள் தகுதி பெற்றுள்ளது.

கோவை: கோவையில் மாவட்ட கிரிக்கெட் சங்கம் நடத்தும் 'கோயம்புத்தூர் யுனைடெட் ரவுண்ட் டேபிள் 186 டிராபிக்கான மாவட்ட அளவில் பள்ளிகளுக்கான கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டிக்கு ஸ்ரீ ராமகிருஷ்ணா எம்.எச்.எஸ்.எஸ் மற்றும் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி வித்யாலயா எம்.எச்.எஸ்.எஸ் அணிகள் தகுதி பெற்றுள்ளது.

கோவையில் மாவட்ட கிரிக்கெட் சங்கம் ஏற்பாடு செய்துள்ள இந்த போட்டி பி.எஸ்.ஜி மருத்துவக் கல்லூரி மைதானத்தில் திங்கள்கிழமை தொடங்கியது. இதில் ஸ்ரீ ராமகிருஷ்ணா, லிசியக்ஸ் எம்.எச்.எஸ்.எஸ், ஆர்.கே.எஸ் கல்வினிலயம் எச்.எஸ்.எஸ் மற்றும் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி வித்யாலயா எம்.எச்.எஸ்.எஸ் ஆகிய அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றது.

இந்த நிலையில், பி.எஸ்.ஜி மருத்துவக் கல்லூரி மைதானத்தில் இன்று நடைபெற்ற அரையிறுதிப் போட்டிகளில், லிசியக்ஸ் எம்.எச்.எஸ்.எஸ்-க்கு எதிராக விளையாடிய ஸ்ரீ ராமகிருஷ்ணா 135 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. ராமகிருஷ்ணா அணியை சேர்ந்த கே சிபியந்தால் சதமடித்து அந்த அணியின் வெற்றியில் பெரும் பங்காற்றினார்.

இதேபோல, ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி வித்யாலயா மற்றும் ஆர்.கே.எஸ் கல்வினிலயம் இடையேயான இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில், ஜி சித்தார்த்தின் அபார பந்துவீச்சால் ஆர்.கே.எஸ் அணி 19வது ஓவரில் 55 ரன்களுக்கு சுருண்டது. பின்னர் விளையாடிய ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி வித்யாலயா 10வது ஓவரில் இலக்கை எட்டி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

இதனையடுத்து, கோவையில் மாவட்ட கிரிக்கெட் சங்கம் நடத்தும் 'கோயம்புத்தூர் யுனைடெட் ரவுண்ட் டேபிள் 186 டிராபிக்கான மாவட்ட அளவில் பள்ளிகளுக்கான கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மற்றும் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி வித்யாலயா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

போட்டியின் பிரத்யேகப் புகைப்படங்கள்:

















Newsletter