கூச் பெஹார் டிராபி: ஜம்மு-காஷ்மீர் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது தமிழகம்

கோவை: ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட கூச் பெஹர் போட்டியில் ஜம்மு-காஷ்மீர் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி தமிழகம் வெற்றி பெற்றது.

கோவை: ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட கூச் பெஹர் போட்டியில் ஜம்மு-காஷ்மீர் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி தமிழகம் வெற்றி பெற்றது.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) சார்பில் நடத்தப்படும் கூச் பெஹார் டிராபியின் கடைசி லீக் போட்டியில் தமிழகம் மற்றும் ஜம்மு-காஷ்மீர் அணிகள் மோதின. சனிக்கிழமை தொடங்கிய நான்கு நாட்கள் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ஜம்மு காஷ்மீர் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

தமிழக அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் முதல் இன்னிங்சின் 5வது ஓவரில் தொடக்க ஆட்டக்காரரை இழந்த ஜம்மு காஷ்மீர் அணி 57 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட் ஆனது. பின்னர் தனது முதல் இன்னிங்க்ஸை தொடங்கிய தமிழக அணி, கேப்டன் பிரதோஷ் ரஞ்சன் பால் விக்ரம் மற்றும் சதீஷுன் அபார ஆட்டத்தால் முதல் நாள் ஆட்டநேர முடிவில் 140 ரன்கள் எடுத்தது.

தொடர்ந்து இரண்டாம் நாள் ஆட்டத்தை துவங்கிய தமிழக அணி 249 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. முதல் இன்னிங்சில் 192 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்க்ஸை விளையாடிய ஜம்மு காஷ்மீர் அணி 268 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

பின்னர் 77 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தமிழக அணி 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 18வது ஓவரில் இலக்கை எட்டி கூச் பெஹார் கோப்பையின் இறுதி லீக் போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதுவரை 7 போட்டிகளில் விளையாடியுள்ள தமிழகம் 4 வெற்றிகளும் 3 தோல்விகளும் பெற்றுள்ளது.

போட்டியின் பிரத்யேகப் புகைப்படங்கள்:









Newsletter