வி.எல்.பி கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான கால்பந்து போட்டி


கோவைப்புதூரில் உள்ள வி.எல்.பி ஜனாகியம்மாள் கல்லூரியில் 3வது வி.எல்.பி ஜனாகியம்மாள் கோப்பைக்கான கால்பந்து போட்டிகள் இன்று நடைபெற்றது. இப்போட்டியினை இந்தியன் ரயில்வே தேசிய தடகள பயிற்சியாளர் முகமது நிஜாமுதீன் துவக்கி வைத்தார்.



இந்நிகழ்ச்சியில், வி.எல்.பி உடற்கல்வித்துறை இயக்குனர் கோல்ட வரவேற்புரை வழங்கினார். கல்லூரியின் தலைவர் சூர்யகுமார் தலைமை தங்கினார். உடற்கல்வி உதவி இயக்குனர் சந்தோஷ் சிறப்பு விருந்தினரை அறிமுகப்படுத்தினார். கல்லூரி முதல்வர் ராஜ்குமார் சிறப்பு விருந்தினரை பாராட்டினர்.

இரண்டு நாட்கள் நடைபெறும் கால்பந்து போட்டியில் தமிழ்நாடு மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் உள்ள பள்ளி மாணவர்கள் விளையாட உள்ளனர். இதில், 30 அணிகள் கலந்து கொள்ள உள்ளது.  à®‡à®±à¯à®¤à®¿ போட்டி நாளை நடைபெறும் இறுதி போட்டியில் ரியோ பாராலிம்பிக் தங்கம் பதக்கம் வென்ற தமிழகத்தை சேர்ந்த மாரியப்பன் கலந்து கொள்ளவுள்ளார்.





Newsletter