சி.டி.சி.ஏ கிரிக்கெட் லீக் போட்டி; கார்த்திக்கின் அசத்தல் பந்துவீச்சால் கோவை காம்ரட்ஸ் அணி வெற்றி

கோவை: பி.எஸ்.ஜி மருத்துவக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற மாவட்ட அளவிலான சி.டி.சி.ஏ கிரிக்கெட் லீக் போட்டியில், அக்ஷயா பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியை 94 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கோவை காம்ரட்ஸ் அணி வெற்றி பெற்றது.


கோவை: à®ªà®¿.எஸ்.ஜி மருத்துவக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற மாவட்ட அளவிலான சி.டி.சி.ஏ கிரிக்கெட் லீக் போட்டியில், அக்ஷயா பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியை 94 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கோவை காம்ரட்ஸ் அணி வெற்றி பெற்றது.

கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில் மாவட்ட அளவிலான லீக் போட்டிகள் மாவட்டத்தின் பல்வேறு மைதானங்களில் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், இன்று நடைபெற்ற நான்காம் டிவிஷன் லீக் போட்டியில் கோவை காம்ரட்ஸ் அணியும் அக்ஷயா பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியும் மோதின.

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த கோவை காம்ரட்ஸ் அணி 46.3 ஓவர்களில் 144 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆட்டமிழந்தது. இதைத்தொடர்ந்து களமிறங்கிய அக்ஷயா அணி, கோவை காம்ரட்ஸ் அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்து 50 ரன்களில் சுருண்டது. இதன் மூலம் கோவை காம்ரட்ஸ் அணி 94 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி அபார பெற்றது. கோவை காம்ரட்ஸ் அணியின் கார்த்திக் சிறப்பாக பந்து வீசி 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

Newsletter