சி.டி.சி.ஏ கிரிக்கெட் லீக் போட்டி: கெளதமின் அபார பந்துவீச்சால் ஆர்.கே.எஸ் அகாடமி வரலாற்று வெற்றி

கோவை: பி.எஸ்.ஜி மருத்துவக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற சி.டி.சி.ஏ கிரிக்கெட் லீக் போட்டியில் ஆர்.கே.எஸ் அகாடமியின் வலது கை வேகப்பந்து வீச்சாளர் கெளதமின் அபார பந்துவீச்சால் சர் ராபர்ட் ஸ்டேன்ஸ் எம்.சி.சி அணியை 107 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

சி.டி.சி.ஏ இரண்டாம் பிரிவு லீக் போட்டிகள் பி.எஸ்.ஜி ஐ.எம்.எஸ் 'ஏ' மற்றும் 'சி' மைதானத்தில் நேற்று நடைபெற்றது. பி.எஸ்.ஜி ஐ.எம்.எஸ்., ஒரு மைதானத்தில் நடந்த ஒரு ஆட்டத்தில், ஆர்.கே.எஸ் சி.ஏ மற்றும் சர் ராபர்ட் ஸ்டேன்ஸ் எம்.சி.சி அணிகள் மோதின இதில் ஆர்.கே.எஸ் கிரிக்கெட் அகாடமி 107 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆர்.கே.எஸ் கிரிக்கெட் அகாடமி 41 ஓவர்களில் 131 ஆல் அவுட்டானது. அந்த அணியின் ஆர் மவுலிராஜ் 46 ரன்கள் எடுத்தார். பின்னர் எளிய இலக்கை கொண்டு விளையாடிய சர் ராபர்ட் ஸ்டேன்ஸ் எம்.சி.சி அணியினர் கெளதமின் அபார பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இதனால் 16.5 ஓவர்களில் வெறும் 24 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியை தழுவியது.

இதேபோல், பி.எஸ்.ஜி ஐ.எம்.எஸ் சி மைதானத்தில் நடைபெற்ற மற்றொரு 2வது பிரிவு போட்டியில், ரெயின்போ 1972 எம்.எம்.சி.சி அணி, விஜய் கிரிக்கெட் கிளப்பை அணியை 238 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது.

Newsletter