ஜூனியர் சூப்பர் கிங்ஸ் டிராபி: ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி சாம்பியன்

திருநெல்வேலியின் இந்திய சிமென்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஜூனியர் சூப்பர் கிங்ஸ் இறுதிப் போட்டியில் லேடி ஆண்டாள் அணியை 13 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

திருநெல்வேலியின் இந்திய சிமென்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஜூனியர் சூப்பர் கிங்ஸ் இறுதிப் போட்டியில் லேடி ஆண்டாள் அணியை 13 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

முன்னதாக தொடரின் அரையிறுதியில், திருப்பூரின் புளூட்டோ அகாடமி அணிக்கு எதிராக விளையாடிய ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி, 7 விக்கெட் வித்தியாசத்தில் அவர்களை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. அதேபோல, வித்யா மந்திர் சீனியர் செகண்டரி பள்ளியை 5 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து லேடி ஆண்டாள் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றிருந்தது.

இறுதிப் போட்டியில் முதலில் பேட் செய்த ஸ்ரீ ராமகிருஷ்ணா பள்ளி அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 141 ரன்கள் எடுத்தது. வி ஸ்ரீராம் ஈஸ்வர் 29 ரன்கள் சேர்த்தார். பின்னர் விளையாடிய லேடி ஆண்டாள் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 128 ரன்களை மட்டுமே எடுத்தது. 



இதன் மூலம் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், ஜூனியர் சூப்பர் கிங்ஸ் டிராபியை உயர்த்திய முதல் சென்னை அல்லாத அணியாக ஸ்ரீ ராமகிருஷ்ணா எம்.எச்.எஸ்.எஸ் கோலோச்சியது.

ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியின் வி.ஸ்ரீராம் ஈஸ்வர் போட்டியின் தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். ஸ்ரீ ராமகிருஷ்ணா எம்.எச்.எஸ்.எஸ்ஸின் எஸ்.ஹர்ஜித் மற்றும் ஜி புஷெல் ஆகியோர் போட்டியின் சிறந்த பேட்ஸ்மேன்களாக தேர்வு செய்யப்பட்டனர். பின்னர் போட்டியின் வெற்றியாளர்களுக்கு இந்திய கிரிக்கெட் வீரர்கள் முரளி விஜய் மற்றும் சுப்பிரமணியம் பத்ரிநாத் கோப்பைகளை வழங்கினர். 

Newsletter