மாநில அளவிலான வேளாண்மை கல்லூரிகளுக்கு இடையேயான விளையாட்டு போட்டி; கோவை அணி சாம்பியன்‌

கோவை: மாநில விளையாட்டு போட்டியில்‌ கோவை வேளாண்மைக்‌ கல்லூரி மற்றும்‌ ஆராய்ச்சி நிலையம்‌ சாம்பியன்‌ பட்டம்‌ வென்றது.

கோவை: மாநில விளையாட்டு போட்டியில்‌ கோவை வேளாண்மைக்‌ கல்லூரி மற்றும்‌ ஆராய்ச்சி நிலையம்‌ சாம்பியன்‌ பட்டம்‌ வென்றது.

வேளாண்மை கல்லூரிகளுக்கு இடையேயான மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள்‌ தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழக மைதானத்தில்‌ டிசம்பர்‌ 20ம்‌ தேதி முதல்‌ 24ம்‌ தேதி வரை கடந்த ஐந்து நாட்களாக நடைபெற்றது.



16 அரசு மற்றும் 28 தனியார்‌ வேளாண்மைக்‌ கல்லூரிகளைச்‌ சார்ந்த 2500 மாணவ மற்றும்‌ மாணவிகள்‌ பங்கேற்றனர்‌. இப்போட்டிகளின்‌ நிறைவு விழா 24ம்‌ தேதி மாலை நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக காரைக்கால்‌ இணை வனப்‌ பாதுகாவலர்‌ வஞ்சுளவள்ளி கார்த்திக்‌, இ.வ.ப அவர்கள்‌ கலந்து கொண்டு பரிசு அளித்தார்‌. தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழக துணைவேந்தர்‌ முனைவர்‌ ந. குமார்‌ அவர்கள்‌ தலைமை வகித்து சிறப்புரை ஆற்றினார்‌. விழாவில்‌ வேளாண்‌ பல்கலைக்கழக மாணவர்‌ நல மைய முதன்மையர்‌ முனைவர்‌ ரகுசந்தர்‌, வேளாண் கல்லூரி முதன்மையர்‌ முனைவர்‌ கல்யாணசுந்தரம்‌ மற்றும்‌ சிறப்பு விருந்தினர்கள்‌ பங்கேற்றனர்‌. உடற்கல்வி இயக்குனர்‌ முனைவர்‌ ராகவன்‌ அவர்கள்‌ நன்றியுரையாற்றினார்‌.

இதில்‌ வெற்றி பெற்றவர்கள்‌, அணிகள்‌ விவரம்‌ மாணவர்களுக்கான கிரிக்கெட்‌, கூடைப்பந்து, கைப்பந்து, ஹாக்கி போட்டியில்‌ கோவை வேளாண்மை கல்லூரி, இறகுப்‌ பந்து போட்டியில்‌ மதுரை வேளாண்மைப்‌ கல்லூரி, பூப்பந்து போட்டியில்‌ மேட்டுப்பாளையம்‌ வனக்ககல்லூரி, சதுரங்க போட்டியில்‌ பொள்ளாச்சி வானவராயர்‌ வேளாண்மைக்‌ கல்லூரி, கபடி போட்டியில்‌ பெரியகுளம்‌ தோட்டக்கலைக்‌ கல்லூரி, கால்பந்து போட்டியில்‌ கிள்ளி குளம்‌ வேளாண்மைக்‌ கல்லூரி, டேபிள்‌ டென்னிஸ்‌ போட்டியில்‌ குமுளுர்‌ வேளாண்மை பொறியியல்‌ கல்லூரி அணிகள்‌ முதல்‌ இடம்‌ பிடித்தன.

மாணவிகளுக்கான கூடைப்பந்து, கைப்பந்து, சதுரங்க போட்டியில்‌ கோவை வேளாண்மை கல்லூரி, இறகுப்‌ பந்து போட்டியில்‌ உசிலம்பட்டி கிருஷ்ணா வேளாண்மை‌ கல்லூரி, டேபிள்‌ டென்னிஸ்‌ போட்டியில்‌ மதுரை வேளாண்மைக்‌ கல்லூரி, பூப்பந்து, கோ-கோ போட்டியில்‌ மேட்டுப்பாளையம்‌ வனக்கல்லூரி அணிகள்‌ முதல்‌ இடம்‌ பிடித்தன.



குழு போட்டியில்‌ மாணவர்‌ பிரிவில் ஐம்பது புள்ளிகளுடனும்‌ மாணவிகள்‌ பிரிவில்‌ முப்பது புள்ளிகளுடனும்‌ கோயம்புத்தூர்‌ வேளாண்மைக்‌ கல்லூரி மற்றும்‌ ஆராய்ச்சி நிலைய அணி சாம்பியன்‌ பட்டம்‌ வென்றது. தடகள போட்டி மாணவர்‌ பிரிவில்‌ 38 புள்ளிகளுடன்‌ மதுரை வேளாண்மை கல்லூரி அணியும்‌, மாணவிகள்‌ பிரிவில்‌ 31 புள்ளிகளுடன்‌ பெரியகுளம்‌ தோட்டக்கலைக்‌ கல்லூர்‌! அணியும்‌ சாம்பியன்‌ பட்டம்‌ வென்றன.

மதுரை வேளாண்மைக்‌ கல்லூரி மாணவர்‌ ஆர்‌. சுப்பிரமணி 18 புள்ளிகள்‌ மற்றும்‌ தஞ்சாவூர்‌ ஆர்‌.வி.எஸ்‌ வேளாண்மைக்‌ கல்லூரி மாணவி க. மாலினி ஆகியோர்‌ சிறந்த தடகள வீரர்‌, வீராங்கனைகளாகத் தேர்வு செய்யப்பட்டனர்‌. குழு மற்றும்‌ தடகள போட்டியில்‌ 102 புள்ளிகள்‌ பெற்ற கோவை வேளாண்மைக்‌ கல்லூரி மற்றும்‌ ஆராய்ச்சி நிலையம்‌ ஒட்டு மொத்த சாம்பியன்‌ பட்டத்தைக்‌ கைப்பற்றியது.

Newsletter