மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டி; 32 பதக்கங்களை வென்று கோவை வீரர்கள் அசத்தல்

கோவை: காஞ்சிபுரத்தில் நடைபெற்ற தமிழக மாநில அமெச்சூர் கிக் குத்துச்சண்டை கூட்டமைப்பு கோப்பை 2019ம் ஆண்டுக்கான போட்டியில் கோவையின் பிரேம் எம்.எம்.ஏ குத்துச்சண்டை அகாடமி மாணவர்கள் 32 பதக்கங்களை வென்றனர்.

பிரேம் எம்.எம்.ஏ கிக் பாக்ஸிங் அகாடமியைச் சேர்ந்த 5 பெண் குத்துச்சண்டை வீரர்கள் உட்பட 32 மாணவர்கள் பங்கேற்ற இந்த மாநில அளவிலான போட்டியில், 10 தங்கம், 7 வெள்ளி மற்றும் 15 வெண்கலப் பதக்கங்களை வென்று அசத்தினர். மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து 600க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்ற இந்த போட்டியில், கோவை மாணவர்கள் நான்காவது இடத்தைப் பெற்றனர்.

கோவையின் திபின், தீபிகா, தேவா கிறிஸ்டி, பிசான் கான், ஆதித்யா, தருண், அன்னபூரணி, மஜித், நிரஞ்சன் மற்றும் உமர் பாஷா உள்ளிட்ட 32 மாணவர்கள் 2020ம் ஆண்டு நடைபெறவுள்ள சர்வதேச குத்துச்சண்டை à®ªà¯‹à®Ÿà¯à®Ÿà®¿à®¯à®¿à®²à¯ பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர்.

எம்.எம்.ஏ அகாடமியின் திபின் மற்றும் தீபிச்சா ஆகியோர் சாம்பியன்ஷிப்பின் சிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்டனர் மற்றும் எம்.எம்.ஏ அகாடமியின் பயிற்சியாளர் பிரேம் போட்டியின் சிறந்த பயிற்சியாளராக தேர்வு செய்யப்பட்டார்.

Newsletter